மார்ச் 30, சென்னை (Kitchen Tips): சூடான ரசம் நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. அந்த வகையில் எலுமிச்சை பழ ரசம் நமக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதனை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம். College Student Drowned And Died: அணையை சுற்றி பார்க்க சென்றபோது நேர்ந்த சோகம் – கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பலி..!
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 3
பெருங்காயம் - அரை கரண்டி
மஞ்சள் தூள் - 1 கரண்டி
சாம்பார் பொடி - 1 கரண்டி
எலுமிச்சம்பழச்சாறு - 3 கரண்டி
துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் - 3 கப்
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 கரண்டி
நெய் - 3 கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
சீரகம், மிளகு - 1 கரண்டி
செய்முறை:
இரண்டு தக்காளி பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடிகட்டி கொள்ள வேண்டும். மீதமுள்ள தக்காளிகளை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்னர், பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் தண்ணீரில் தக்காளி சாறு, நறுக்கி வைத்த தக்காளி அதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கீறிய பச்சை மிளகாய், சாம்பார் பொடி, மிளகு, கறிவேப்பில்லை ஆகியவற்றை போட்டு, இதனுடன் பொடித்து வைத்த சீரகம், மிளகு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு, பருப்பு தண்ணீரை 2 ,3 முறை நன்கு நுரை வரும்படி ஆற்றி அதனுள் ஊற்றவும். பின்னர், நன்கு கொதிந்ததும், எண்ணையில் நெய், கடுகு, காய்ந்த மிளகாய் கொண்டு தாளித்து அதோடு சேர்த்து கொள்ளவேண்டும். அதனுள், எலுமிச்சம் பழச் சாறு ஊற்றி, மல்லித்தழைகளை தூவிவிட வேண்டும். இந்த சுவையான சூடான ரசத்தை சாதத்தில் போட்டு சாப்பிடலாம். இதனை சூப்பாகவும் பருகலாம்.