ஏப்ரல் 08, சென்னை (Kitchen Tips): மாவத்தல் கொண்டு ரசம் எப்படி செய்வது என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - அரை கப்

மாங்காய் வற்றல் - 10

தக்காளி - 2

வெங்காயம் - 2

பூண்டு - 10 பல்

காய்ந்த மிளகாய் - 6

புளி - சிறிதளவு

மிளகு,சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

கொத்தமல்லி, கறிவேப்பில்லை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. Young Woman Killed Teenager: புகைபிடிப்பதை முறைத்து பார்த்த வாலிபர்; கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண்..!

செய்முறை:

முதலில், துவரம்பருப்பை குழையாமல் வேகவைக்க வேண்டும். மாங்காய் வற்றலை சுடுதண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். புளியை கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு வேகவைத்த பருப்பு,வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவைக்க வேண்டும். வெந்தபிறகு, புளி தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, வெந்தயம், கடுகு, மிளகு, சீரகத்தூள், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும். பின்பு, கொத்தமல்லித்தழைகளை மேற்பரப்பில் தூவிவிட்டு இறக்கவும். இறுதியில் இதோ மாங்காய் வற்றல் ரசம் தயார்.