ஏப்ரல் 09, சென்னை (Kitchen Tips): வெள்ளை பூசணிக்காய், நெய், சர்க்கரை முதலிய பொருட்களை முக்கியமாக கொண்டு செய்யப்படும் அல்வா காசி அல்வா அல்லது பூசணி அல்வா ஆகும். பூசணி அல்வா செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை பூசணிச்சாறு (அரைத்து வடிகட்டியது) - 300 மில்லி லிட்டர்
முந்திரி பருப்பு, வெள்ளரி விதை, பூசணி விதை - தலா 100 கிராம்
நெய் - 2 தேக்கரண்டி
தேன் - 3 தேக்கரண்டி
ஏலக்காய் - 15
பனங்கல்கண்டு - தேவையான அளவு. Sea Water Is Absorbed: திடீரென உள்வாங்கிய கடல்; சுற்றுலா பயணிகள் அச்சம்..!
செய்முறை:
முதலில் வெள்ளரி விதை, பூசணி விதை மற்றும் முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை தனி தனியாக வறுத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், பூசணி சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதிந்து சுண்டியதும், அதில் நாம் பொடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். பிறகு, நெய் மற்றும் பணங்கல்கண்டு சேர்த்து கிளறவும். இறுதியில் அல்வா பதத்திற்கு வந்ததும் அதில் தேன் கலந்து பரிமாற வேண்டும். இதோ சுவையான பூசணி அல்வா ரெடி.