ஏப்ரல் 05, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே ஆயக்குடி கிராமத்தில் பள்ளி மாணவிகளுக்காக ஆதிதிராவிடர் நல விடுதி ஒன்று இருக்கின்றது. இதில், இன்று காலை உணவு உண்பதற்காக மாணவிகள் அனைவரும் விடுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து (Roof Collapsed In A Government Hostel) பள்ளி மாணவிகள் மீது விழுந்துள்ளது. Terrorists Attack By Security Forces: பயங்கரவாதிகள் தாக்குதல்; விடியவிடிய நடந்த தாக்குதலில் 28 பேர் பலி..!
மேற்கூரை இடிந்து விழுந்ததில், சமையலர் மற்றும் 5 பள்ளி மாணவிகள் உட்பட 6 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்தில் சமையலருக்கும், மாணவி ஒருவருக்கும் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து இவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பள்ளி மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் விடுதி பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், மேற்கூரை பற்றி முன்கூட்டியே மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, எந்தவித சரிபார்ப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை என்று விடுதி ஊழியர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.