Tuberculosis (Photo Credit: Wikipedia)

மார்ச் 28, சென்னை (Chennai News): கடந்த 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் சுமார் 21,722 பேருக்கு காச நோய் இருப்பது பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். காச நோயை 2025-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். Bus Accident In National Highway: சாலையின் தடுப்புச் சுவரில் பேருந்து மோதி விபத்து – 10 பேர் படுகாயம்.!

இதனால், காச நோய் பாதிப்புக்கான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. மேலும், தமிழகத்தில் காச நோயாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு, காச நோய் ஒழிப்பிற்கான பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றது. களப்பணியாளர்கள், அனைவரின் வீட்டிற்கும் சென்று காச நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தேவையான பரிசோதனைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருவதால், இதுவரை 84 சதவீதம் பேர் முதல் சிகிச்சையிலேயே குணமடைந்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களில், நாடு முழுவதும் சுமார் 5.15 லட்சம் காச நோயாளிகளும், தமிழகத்தில் மட்டும் 21,722 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், தனியார் மருத்துவமனையில் 5496 பேருக்கும், அரசு மருத்துவமனைகளில் 16,226 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.