Chapathi Noodles (Photo Credit: YouTube)

மார்ச் 31, சென்னை (Chennai News): இன்றளவில் பெரும்பாலான வீட்டில் சப்பாத்தி என்பது இரவு மற்றும் காலை நேர உணவாக மாறிவிட்டது. பலரும் சப்பாத்திக்கு தொடுகறியாக விதவிதமான பொருட்களை செய்து சாப்பிட தொடங்கிவிட்டனர். அந்த வகையில், இன்று பலருக்கும் பிடித்த சப்பாத்தியில், சுவையாக சப்பாத்தி நூடுல்ஸ் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். சுவையான சப்பாத்தி நூடுல்ஸை, சப்பாத்தி தேய்த்து பின் தயாரித்து சாப்பிடலாம். அல்லது இரவில் மீந்த சப்பாத்தியை, மீண்டும் சூடேற்றி, சப்பாத்தி நூடுல்ஸ் தயாரித்து சாப்பிடலாம். Mullangi Sambar: கோடையில் கொடையான முள்ளங்கி.. சுவையான சாம்பார் வைப்பது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.! 

சப்பாத்தி நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

சப்பாத்தி - 3 அல்லது 4,

முட்டை - 4,

நறுக்கிய வெங்காயம் - 3,

நறுக்கிய தக்காளி - 3,

பச்சை மிளகாய் - 1,

இஞ்சி - இன்ச் அளவு,

பூண்டு பற்கள் - 4,

மஞ்சள் தூள் - அரைக்கரண்டி,

மிளகுத்தூள் - 1 கரண்டி,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட சப்பாத்தியை மெல்லச்சாக, நூடுல்ஸ் போல உருட்டி நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு-உளுந்து, பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பகுதியளவு வெந்ததும், சப்பாத்தியை சேர்த்து கிளற வேண்டும். பின் 1 முதல் 2 நிமிட இடைவெளியில், முட்டை சேர்த்து கிளறி, கறிவேப்பில்லை தூவி இறக்கினால் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயார். இறுதியாக மிளகுத்தூள் மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும்.