மார்ச் 30, சென்னை (Cooking Tips Tamil): கிழங்கு வகை காய்கறிகளில் ஒன்றான முள்ளங்கி (Mullangi Benefits), உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கக்கூடியது ஆகும். குறிப்பாக, கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பு பிரச்சனையை சரிசெய்ய, முள்ளங்கி பேருதவி செய்கிறது. சிறுநீரகம் சார்ந்த பிரச்சனையை சரி செய்தல், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, இதய ஆரோக்கியம் மேம்பட, கல்லீரலை சுத்தப்படுத்த, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முள்ளங்கி உதவுகிறது. இத்தகைய பல நன்மைகள் கொண்ட முள்ளங்கியில், சுவையான சாம்பார் வைப்பது எப்படி? என இன்று தெரிந்துகொள்ளுங்கள். Summer Health Tips: கோடையின் தாக்கத்தில் இருந்துவிடுபட என்ன செய்யலாம்? மருத்துவர் கூறும் அசத்தல் டிப்ஸ்.!
முள்ளங்கி சாம்பார் (Radish Sambar) செய்யத் தேவையான பொருட்கள்:
நறுக்கிய முள்ளங்கி - 3 கப்,
துவரம்பருப்பு - 1 கப்,
சாம்பார் மசாலா - 3 கரண்டி,
புளிச்சாறு - கால் கப்,
நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
கடுகு & உளுந்து - அரை கரண்டி,
சீரகம் - அரை கரண்டி,
கறிவேப்பில்லை & கொத்தமல்லி - சிறிதளவு,
பெருங்காயத்தூள் - சிறிதளவு,
மஞ்சள் தூள் - அரை கரண்டி,
உப்பு & எண்ணெய் - தேவையான அளவு,
வரமிளகாய் - 1.
செய்முறை:
- முதலில் நாம் எடுத்துக்கொண்ட துவரம்பருப்பை, அரைமணிநேரம் நீரில் கழுவி ஊறவைக்க வேண்டும். பின் அதில் 1 க்கு 3 என்ற அளவில் நீர்விட்டு, மஞ்சள் தூள், சீரகம், மிளகு, வரமிளகாய், அரை வெங்காயம், அரை தக்காளி சேர்த்து, பருப்பை 75% வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வானெலியில் எண்ணெய் முள்ளங்கியை சிறிது வதக்கி தனியே எடுத்துக்கொள்ள வேண்டும். வேண்டாம் என்பவர்கள் அப்படியேவும் பயன்படுத்திக்கொள்ளலாம். எண்ணெய் ஊற்றி கடுகு-உளுந்து, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் வெங்காயம், தக்காளி, சிறிது கறிவேப்பில்லை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம், தக்காளி வதங்கியதும் முள்ளங்கியை சேர்த்து லேசாக கிளறி, பின் தேவையான அளவு மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, சாம்பார் மசாலா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
- சாம்பார் முள்ளங்கி மணக்க வரும்போது, அதில் புளிக்கரைசலை சேர்த்து, பின் உப்பு-காரம் ஆகியவற்றை சோதித்துக்கொள்ள வேண்டும். சாம்பார் கொதி வந்ததும், அடுப்பை அனைத்து கொத்தமல்லி தழைகள் தூவி இறக்கினால், சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்.