
ஜூன் 25, chennai (Cooking Tips Tamil): வாரம் முழுவதும் ஒரே மாதிரியான குழம்பு செய்து அலுத்துவிட்டதா? அப்போ செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு வைத்து அசத்துங்கள். இந்த செய்தித்தொகுப்பில் செட்டிநாடு ஸ்டைலில் காரக்குழம்பு எப்படி செய்வது என்பதை விரிவாக காணலாம். இந்த காரக்குழம்புடன் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றையும் சேர்க்கலாம். Health Tips: சர்க்கரை நோயால் நினைவாற்றல் இழப்பு.. மக்களே கவனமா இருங்க.. மொத்தமும் க்ளோஸ்.!
தேவையான பொருட்கள் :
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கருவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - அரை தேக்கரண்டி,
வரமிளகாய் - இரண்டு,
துருவிய தேங்காய் - கால் கப்,
சோம்பு - ஒரு தேக்கரண்டி,
மல்லி - இரண்டு தேக்கரண்டி,
வெந்தயம் - கால் தேக்கரண்டி,
பூண்டு - ஐந்து பல்,
சின்ன வெங்காயம் - அரை கப்,
தக்காளி - இரண்டு,
கத்திரிக்காய் - இரண்டு,
உருளைக்கிழங்கு - இரண்டு,
புளிச்சாறு - ஒரு கப்,
வெல்லம் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து சோம்பு, வரமிளகாய், மல்லி, வெந்தயத்தை வறுத்து, துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் சேர்த்து வெதுவெதுப்பான நீரூற்றி விழுது போல அரைக்க வேண்டும்.
இதன்பின் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்ததும் கத்திரிக்காய், புளிச்சாறு, உருளைக்கிழங்கு, வெல்லம் சேர்த்து சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
கொதித்த குழம்பில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் முன்பே அரைத்து வைத்த மசாலாவையும் சேர்த்து இறக்கினால் செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு தயாராகிவிடும்.