
ஜூன் 01, சென்னை (Cooking Tips Tamil): அதிக ஊட்டச்சத்துக் கொண்ட காய்கறிகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்வது நமது உடல் நலனுக்கு மிகவும் நன்மை தரும். பலருக்கும் பிடித்த முருங்கைக்காயில் எப்போதும் சாம்பார், புளி குழம்பு போன்றவை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று முருங்கைக்காயில் எண்ணெய் தொக்கு செய்வது எப்படி என தெளிவாக தெரிந்து கொள்ளலாம். Cooking Tips: ஆரோக்கியமான சுரைக்காய் இட்லி செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் - இரண்டு,
நறுக்கிய வெங்காயம் - நான்கு,
தக்காளி - இரண்டு,
சோம்பு - ஒரு தேக்கரண்டி,
தேங்காய் - ஒரு தேக்கரண்டி,
மிளகாய் தூள் - மூன்று தேக்கரண்டி,
உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் எடுத்துக்கொண்ட முருங்கைக்காயை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளவும். தக்காளி பழத்தை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பின் மிக்ஸியில் தேங்காய், சோம்பு சிறிதளவு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளி எடுத்துக் கொண்டதில் பாதி அளவை மிக்ஸியில் சேர்த்து அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி முதலில் முருங்கைக்காயை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கடுகு, உளுந்து சேர்த்து வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்க வேண்டும்.
இவை வதங்கியதும் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, முருங்கைக்காய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான எண்ணெய் முருங்கைக்காய் தொக்கு தயாராகிவிடும்.