Summer Heat & Water Drinking (Photo Credit: Pixabay)

மார்ச் 28, சென்னை (Health Tips): வெயில் காலத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்க நாம் பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கோடையின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பருத்தி துணி உடைகளை தேர்வு செய்வது நல்லது. பாலிஸ்டர் போன்ற உடைகள், கோடை வெயில் தாக்கத்தால், உடல் நலனை மோசமாக்கும். நாம் வெளியே செல்லும்போது குடை எடுத்து செல்ல வேண்டும். தினமும் காலை 50 மில்லி கற்றாழை சாறு குடிக்கலாம். இது உடல் சூடு குறைக்க உதவும், வெயில் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும். தேங்காய்ப்பால், கற்றாழை ஜெல், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து அரைத்தும் குடிக்கலாம். இதனால் அஜீரண பிரச்சனை வராது, சிறுநீரக எரிச்சல் குறையும். Orange Benefits: ஆரஞ்சு பழத்தில் உள்ள அசத்தலான நன்மைகள் என்ன..? விவரம் இதோ..! 

தர்பூசணி சாப்பிடலாம்:

தினமும் காலை எழுந்ததும் 2 கிளாஸ் நீர் குடிக்க வேண்டும். வைட்டமின் டி பிரச்சனையை குறைக்க, 10 நிமிடம் காலை நேரத்தில் வெயிலில் சென்று வரலாம். இதனால் வைட்டமின் டி உடலுக்கு கிடைக்க உதவும். கோடையில் எளிமையான உணவுகளை சாப்பிட வேண்டும். கம்பு, கேப்பை கூழ், களி, அடை போன்றவற்றை சாப்பிடலாம். நீர் காய்கறிகளான வெண்பூசணி, சுரைக்காய், வாழைத்தண்டுகளை சாப்பிடலாம். சாறு போலவும் அரைத்து குடிக்கலாம். இவை மூன்றையும் அரைத்து சாறு போலவும் குடித்தால், பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். நீர்ச்சத்துள்ள பழங்கள், தர்பூசணி சாப்பிடலாம். 96% நீர் கொண்ட தர்பூசணி, உடலுக்கு நன்மை தரும். கிட்னி நலம்பெறும். மலச்சிக்கல் ஏற்படாது, உடல் வெப்பம் குறையும்.

கிர்ணி பலம் சாப்பிடலாம்:

மூலம் தொடர்புடைய பிரச்சனை குறையும். கோடையில் மூச்சிரைப்பு பிரச்சனை உடையோர், தர்பூசணி சாப்பிடலாம். தர்பூசணியில் இருக்கும் பொட்டாசியம், ரத்த அழுத்த பிரச்சனையை குறைக்கும். விதைகள் இல்லாத பழங்களை சாப்பிட வேண்டாம். அதேபோல, அதிக அடர்த்தி கொண்ட, சாயமேற்றிய உணவுகளை சாப்பிட வேண்டாம். விதையுடன் இருக்கும் பழங்களை வாங்கி சாப்பிடலாம். இதனால் உடலில் இருக்கும் தேவையற்ற உப்பு உட்பட அமிலத்தை வெளியேற்ற முடியும். கிர்ணி பழம் வெயிலால் ஏற்படும் அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஆகியவற்றை குறைக்கும். உடலுக்கு சக்தியை தரும்.

மருத்துவரின் ஆலோசனை: