Respective: Egg Curry

டிசம்பர், 11: முட்டை (Egg) என்றால் பலருக்கும் கொள்ளை பிரியம் என்று தான் கூற வேண்டும். வீடுகளில் அன்றைய நாளின் இரவில் முட்டையை வேக வைத்தோ / ஆம்லேட்டாகவோ செய்து சாப்பிடவில்லை என்றால் உறக்கம் இருக்காது.

இன்னும் சிலர் வாரம் ஒருமுறை அல்லது 2 வாரத்திற்கு ஒருமுறை முட்டை குழம்பு (Egg Kuzhampu) செய்து சாப்பிடுவார்கள். இன்று சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி என காணலாம். நீங்கள் வழக்கமாக முட்டை குழம்பு (Egg Curry) செய்யும் முறையில் இருந்து நம் முறை மாறுபட்டு இருந்தாலும், சுவை மிகுந்து காணப்படும். 60 Aged Man Health: 60 வயதை கடந்துவிட்டீர்களா?.. கட்டாயம் இவ்வகை உடற்பயிற்சியை செய்து ஆரோக்கியத்துடன் இருங்கள்.! 

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 3,

தக்காளி - 2,

முந்திரி - சிறிதளவு,

இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு,

முட்டை - 4,

கிராம்பு, சோம்பு, பட்டை, பிரிஞ்சு இலை - சிறிதளவு,

மிளகு - தேவைக்கு ஏற்ப.

செய்முறை:

  • முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், இஞ்சி, சிறிதளவு, பூண்டு, கிராம்பு, சோம்பு, மிளகு, பட்டை, பிரிஞ்சு இலை, சீரகம் போன்றவற்றை மிக்சியில் சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • பின்னர் தக்காளியை தனியே அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இவை தயாரானதும் அடுப்பில் வானெலியை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டையை முதலில் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்த வெங்காய கலவையை சேர்க்க வேண்டும்.
  • இதனை 5 நிமிடம் கிளறிய பின்னர், தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறிவிட்டு 10 நிமிடம் கொதிக்க விடவேண்டும். அதன்பின் கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லி தூள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். இன்றளவில் கடைகளில் முட்டை மசால் கிடைக்கிறது. அதை வேண்டும் என்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.
  • இவற்றை சேர்த்த பின்னர், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். இவை தயாரானதும் முட்டையை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக உடைத்து பொறுமையாக ஊற்ற வேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருப்பது அவசியம். இல்லையேல் முட்டை குழம்பு முட்டை குருமாவாகிவிடும்.
  • இவை அனைத்தையும் சரியாக செய்த பின்னர் அடுப்பு மிதமான தீயில் இருப்பதை உறுதி செய்து 20 நிமிடங்கள் கழித்து முட்டை வெந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான முட்டை குழம்பு தயார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 12:38 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).