ஜூலை 06, சென்னை (Cooking Tips Tamil): நம்மில் பலருக்கும் மீன் வகை உணவுகள் பிடித்த ஒன்றாக தற்போது வரை இருக்கிறது. அதிலும் குறிப்பாக இறால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று கூறலாம். ஏனெனில் இறால் வகைகளில் முள் என்பது இருக்காது. பெரும்பாலும் இறாலை வைத்து பிரியாணி, வறுவல், கிரேவி செய்து பார்த்திருப்போம். இன்று வீட்டிலேயே இறாலில் சுவையான தொக்கு செய்வது எப்படி? என காணலாம். இறால் குடல் மற்றும் வயிறு ஆரோக்கியமாக இருக்க உதவுவதுடன் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இறாலின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கவும் உதவும். Jaggery Benefits: வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.. தெரிஞ்சிக்கோங்க இனி சுகரே வாங்க மாட்டிங்க.!
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டேபிள் ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு, சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்,
வெங்காயம் - 3,
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்,
தக்காளி - 4,
பச்சை மிளகாய் - 3,
இறால் - 1 கிலோ,
மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 5 டேபிள் ஸ்பூன்,
சீரகத்தூள், மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
மிளகுத்தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.
செய்முறை :
- முதலில் எடுத்துக்கொண்ட பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, வெங்காயம் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- அடுத்ததாக தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்த இறாலையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- இறால் வெந்தபின் நல்லெண்ணெய், கருவேப்பிலை, கொத்தமல்லி, மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் வீட்டிலேயே சுவையான, மணமான இறால் தொக்கு தயாராகிவிடும்.