டிசம்பர், 11: தென்னிந்திய உணவுகளில் சாம்பாருக்கு (Sampar Receipe) தனி இடம் எப்போதும் இருக்கும். வாரத்தின் 2 நாட்களான வெள்ளி, செவ்வாய்களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இல்லங்களில் காய்கறிகள் நிரம்ப சுவையான மனமனக்கும் சாம்பாரை வைத்து நம்மை ருசிக்க வைத்திருப்பார்கள்.
இவ்வாறாக சாம்பாருக்கு சேர்க்கப்படும் மசால்பொடி (Sampar Masala) இன்றளவில் கடைகளில் கிடைப்பதை வாங்கி பலரும் உபயோகம் செய்து வருகின்றனர். கடைகளில் விற்பனை செய்யும் மசாலை விட, வீட்டில் நமது கைப்பக்குவதில் தயார் செய்யப்படும் மசாலாக்கள் கூடுதல் சுவை & மணத்தை கொடுக்கும். இன்று சாம்பார் மசாலா பொடி செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல் - அரை கிலோ,
கொத்தமல்லி - 600 கிராம்,
சீரகம் - 200 கிராம்,
துவரம் பருப்பு - 100 கிராம்,
கடலை பருப்பு - 100 கிராம்,
மிளகு - 50 கிராம்,
வெந்தயம் - 50 கிராம்.
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட மிளகாய் வற்றலை வெயிலில் நன்றாக காயவைத்து எடுத்து கொள்ள வேண்டும். ARRahmanHistory: யார் இந்த இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான்?.. சோதனைகளை சாதனையாக்கிய வெற்றி நாயகன்.!
பின்னர் கொத்தமல்லி, சீரகம், துவரம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, வெந்தயம் போன்றவற்றை வானெலியில் இட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
மிளகாய் வற்றல் நன்கு காய்ந்ததும் அனைத்தையும் ஒன்றாக கலந்து சிறிது சிறிதாக மீசையில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளலாம்.
இதனை காற்று புகாத பாத்திரம் அல்லது கண்ணாடி குடுவையில் அடைத்து வைத்து 5-6 மாதங்கள் வரை உபயோகம் செய்யலாம்.
வீட்டில் அரைத்த சாம்பார் மசாலா தரத்துடனும் இருக்கும் என்பதால் நமக்கு பிடித்தமானதாக அமையும்.