Kovil Puliyogare (Photo Credit: @SathiyaSamayal X)

செப்டம்பர் 28, திட்டக்குடி (Cooking Tips): தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான, பாரம்பரியமிக்க உணவுகளில் ஒன்றாகவும் இருப்பது புளியோதரை (Puliyogare Recipe). இதிலும் கோவிலில் (Temple Puliyogare) வழங்கப்படும் புளியோதரை என்றால், அதன் சுவைக்கு அடிமையாகாத நபர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு கோவில் (Kovil Puliyogare) புளியோதரையின் சுவை என்பது பிரம்மதமாக இருக்கும். உணவுதான் தனிமனிதனின் ஆதாரம் எனினும், கடவுளே இல்லை என்று கூறுவோரைக்கூட தனது நறுமணத்தால் சுண்டியிழுக்கும் தன்மை கொண்டது கோவில்களில் வழங்கப்படும் புளியோதரை (Temple Tamarind Rice Recipe). இன்று சுவையான கோவில் புளியோதரையை (Puliyodharai) நாம் வீடுகளில் எப்படி செய்வது என காணலாம். கோவில் புளியோதரையின் சுவையை பொறுத்தமட்டில், அதில் வெந்தயம் மற்றும் மிளகு பயன்படுத்துதல், மசாலா பொருட்களை தவிர்த்தல் முக்கிய ரகசியமும் ஆகும். Lemon Cake Recipe: வீட்டிலேயே சுவையாக லெமன் கேக் செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..! 

புளியோதரை செய்யத் தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்,

வேர்க்கடலை - 6,

புளி - நெல்லிக்காய் அளவு,

காய்ந்த மிளகாய் - 12,

மல்லி விதை - 2 கரண்டி,

மிளகு - 2 கரண்டி,

உளுந்தம்பருப்பு - 4 கரண்டி,

வெந்தயம் - 4 கரண்டி,

வெள்ளை அல்லது கருப்பு எள்ளு - 5 கரண்டி,

பெருங்காயத்தூள் - 1 கரண்டி,

கடுகு & உளுந்து - தாளிக்க தேவைக்கேற்ப,

மஞ்சள் தூள் - 2 கரண்டி,

வெல்லம் - சிறிய நெல்லிக்கனி அளவு,

நல்லெண்ணெய் - தேவையான அளவு,

மிளகாய் தூள் - தேவையான அளவு,

உப்பு - தேவையான அளவு,

கறிவேப்பில்லை - சிறிதளவு,

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட புளியை நீரில் சேர்த்து ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். அரிசியை சோறாக வடித்து வைத்து, சற்று உதிரியாக வரும் அளவு கவனித்து பருவத்துடன் எடுத்துக்கொள்ளவும்.

வானெலியில் மிதமான சூட்டில் மல்லி விதை, மிளகு, 5 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுக்கவும். பின் கடலை பருப்பு, உளுந்தம்பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும். வெந்தயத்தையும், எள்ளையும், கருவேப்பில்லையையும் தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளவும். மேற்கூறியவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்தால், அதன் வறுபடும் திறன் என்பது மாறுபடும். ஆகையால், தனித்தனியே இட்டு வறுப்பது நல்லது.

வறுத்து வைத்துள்ள பொருட்களை சூடு குறைந்த பின்னர், மிக்சியில் சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் அம்மி அல்லது குழவி வைத்திருப்போர், அதில் சேர்த்து அரைக்கலாம். சுவை கூடுதலாக இருக்கும். Medicine Test Fail: மக்களே உஷார்! பாரசிட்டமல் உள்ளிட்ட பல மருந்துகளால் ஆபத்து.. தரமற்ற மருந்துகளின் முழு லிஸ்ட் இதோ..!

பின் ஊறவைத்துள்ள புளியை கரைத்து கரைசலாக எடுத்துக்கொள்ளவும். வாணெலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சுடவைக்க வேண்டும். நல்லெண்ணெய் புளியோதரைக்கு கூடுதல் சுவையை வழங்கும்.

எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்த்த மிளகாய், வெந்தயம், எள்ளு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும். இவை வறுபட தொடங்கியதும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வேர்க்கடலை, கருவேப்பில்லை ஆகியவற்றைன் ஒன்றாக சேர்த்து கிளற வேண்டும்.

தேவைக்கேற்ப உப்பு மற்றும் விருப்பம் இருப்பின் சிறிதளவு மிளகாய்தூள் சேர்த்து சாப்பிட வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து, வெல்லம் போட்டு கொதிக்கவிடவும். புளிக்கரைசலை சேர்த்த பின்னர், கொதிவந்து வற்றத் தொடங்கியதும் நாம் அரைத்து வைத்துள்ள பொடியை 2 கரண்டி அளவு சேர்த்து கொதிக்கவிடவும்.

பின் வடித்து வைத்துள்ள சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, ஏற்கனவே தயார் செய்த பொடியை சேர்த்து, புளிக்கரைசலுடன் கிளறிவிடவேண்டும். சுவையான கோவில் புளியோதரை தயார். அப்பளம், கலர் வற்றல், சோற்று வடகம் ஆகியவை கோவில் புளியோதரைக்கு சுவையாக இருக்கும்.