
ஜூன் 20, சென்னை (Cooking Tips Tamil): சிக்கன? மட்டனா? அது எனக்கு வேண்டாம் பா, பிடிக்காது என்று கூறும் நபர்களுக்கும் காளான் பிடிக்கும். அசைவ உணவுகளுக்கு இணையான சைவ புரதச்சத்துக்களை கொண்டுள்ளது காளான். இதனை இட்லி, தோசை, சப்பாத்திக்கும் கிரேவி போல செய்து சாப்பிடலாம். காளானில் பெப்பர் மசாலா, பிரியாணி போன்ற விதவிதமான உணவுகளும் சமைக்கலாம். இன்று சுவையான காளான் மசாலா செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள். Kothamalli Kara Urundai: கொத்தமல்லி கார உருண்டை.. செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!
தேவையான பொருட்கள் :
காளான் - 300 கிராம்,
லவங்கப்பட்டை - 2,
ஏலக்காய் - 4,
சீரகம் - 1 கரண்டி,
பெருஞ்சீரகம் - 1 கரண்டி,
வெங்காயம் - 2,
மஞ்சள் தூள் - 1 கரண்டி,
கரம் மசாலா - 1 கரண்டி,
கொத்தமல்லி பொடி - 1 கரண்டி,
சீரகப்பொடி - 1 கரண்டி,
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு,
பச்சை மிளகாய் - 3,
கருவேப்பிலை - சிறிதளவு,
தக்காளி - 2,
கொத்தமல்லி தழை - சிறிதளவு,
மிளகாய் தூள் - 3 கரண்டி,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் எடுத்துக் கொண்ட காளானை நன்கு சுத்தம் செய்து நீள வாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், லவங்கப்பட்டை, கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா, சீரகத்தூள், கொத்தமல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும். அதனுடன் உப்பு மற்றும் அரை கப் நீர் சேர்த்து வதக்கி கொதிக்க விட வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் தருவாயில் நறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து சிறிதளவு நீரூற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால் சுவையான காளான் கிரேவி தயார். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடலாம்.