
மே 20, சென்னை (Cooking Tips Tamil): கோடைகாலத்தில் ஒவ்வொருவரும் உடல் சூடு சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுவோம். இவ்வாறான தருணத்தில் தயிர் உடலுக்கு குளிர்ச்சி தரும் முக்கிய பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. தயிரில் தண்ணீர் ஊற்றி மோர் போல கடைந்து குடிப்பதும் உடலுக்கு நல்லது. தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை குறைப்பது மட்டுமல்லாது, குடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியா செரிமான மண்டலத்தை ஊக்குவிக்கிறது.
வெயிலுக்கு குளிர்ச்சி தரும் சிறந்த உணவு :
மருத்துவர்கள் இந்த கோடைகாலத்தில் தினமும் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சேர்க்க அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் புரொபயோடிக் உள்ள தயிர் சிறந்த உணவாக கருதப்படுகிறது. வீட்டிலேயே தயிரை உறைய வைத்து தயாரிப்பது மிகச்சிறந்த நன்மை தரும். வீட்டில் தயிர் உறைய வைத்து தயாரிப்பது எப்படி என்பது தொடர்பாக இப்பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
வீட்டிலேயே தயிர் செய்வது எப்படி ?
சுத்தமான பாலை முதலில் தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். பின் பால் சூடு முக்கால் பதம் குறையும் வரை காத்திருக்க வேண்டும். பால் சூடு முக்கால் பதம் மாறியதும், அதில் காய்ந்த மிளகாய் சிலவற்றைச் சேர்த்து பாலை தயிராக மாற்றலாம். அதே போல பச்சை மிளகாயை சிறிதளவு சேர்த்தும் பாலை தயராக மாற்றலாம். இவ்வாறாக வீட்டிலேயே நாம் பாலை தயிராக மாற்றி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.