Biscuit (Photo Credit: Pixabay)

ஜூன் 20, ஆரோக்கியம் (Health Tips): குழந்தைகளுக்கு நாம் இன்றளவில் வாங்கிக்கொடுக்கும் பல சிற்றுண்டி மற்றும் துரித உணவுகளில் பல வகையான உடல்நலக்கோளாறுகளை ஏற்படுத்தும் ரசாயனங்கள் இருக்கின்றன. நிறத்திற்காகவும், சுவைக்காகவும், கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் பல அமிலங்கள் உணவு பொருட்களுடன் சேர்க்கப்படுகின்றன.

இன்றளவில் குழந்தைகளுக்கு அதிகளவு பிஸ்கட் வாங்கி கொடுக்கிறோம். பிஸ்கட்டில் சர்க்கரை, கொழுப்பு, டிரான்ஸ்பரண்ட் அமிலம் போன்றவை சேர்க்கப்படுகின்றன. இவை அதிக வெப்பநிலையில் எண்ணெய் மற்றும் டால்டா ஆகியவற்றை சூடேற்றும்போது உருவாகும் அமிலங்கள் ஆகும்.

இந்த அமிலங்களின் நிலையை சோதனை செய்து பாக்கெட்டுகளில் குறிப்பிடவேண்டும் என்ற விதி இருந்தாலும் அதனை பிஸ்கட் நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகளவு சேரும் பட்சத்தி, இதய நோய்கள் ஏற்படும். சர்க்கரை மற்றும் கொழுப்பு அளவும் அதிகரிக்கும். Rain Alert Tamilnadu: 10 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!

இவ்வாறான பிஸ்கட்டுகளை குழந்தைகள் சாப்பிட்டால் பல உடல்நலக்குறைவுகள் ஏற்படும். குழந்தைகள் 4 முதல் 5 பிஸ்கட்டுகளை சாப்பிட்டதும் பசியில்லை என்று கூறுவார்கள். பிஸ்கட்டில் இருக்கும் சுவை பிற காய்கறிகளின் மீது அவர்களை திரும்பவிடாது. ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கான காரணம் பிஸ்கட்டின் சுவை தான்.

அதேபோல, பிஸ்கட் சாப்பிடும் குழந்தைகள் வாய்கொப்புளிப்பது இல்லை. இதனால் பல்சொத்தை பிரச்சனை ஏற்படும். குழந்தைகளுடைய செரிமான சக்திக்கு ஒவ்வாத உணவாக இருக்கும் பிஸ்கட், நீர்ச்சத்தை அதிகம் உறிஞ்சு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படும்.

வாரம் ஒருமுறை சுவையாக பிஸ்கட் சாப்பிடுவது பிரச்சனை இல்லை என்றாலும், உணவுக்கு மாற்றாக அல்லது அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவது பிரச்சனை தான். பிஸ்கட்டுக்கு பதில் பழம், சுண்டல் போன்றவை சாப்பிடலாம்.