ஆகஸ்ட் 25, சென்னை (Chennai News): இந்திய சமையலறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் உணவு வெங்காயம். இதில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின்கள், தாதுசத்துகள், நார்ச்சத்துக்கள் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிடைக்கின்றன. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால், நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. வெங்காயத்தில் இருக்கும் ஆர்கானிக் சல்பர் இன்சுலின் செயல் திறனை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும். கந்தகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க வழிவகை செய்யும். இதனால் இதய நோய், மாரடைப்பு அபாயம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். Health Warning: ஊறுகாய் பிரியர்களே உஷார்.. சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம்.!
பச்சை வெங்காயம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
பாக்டீரியா வைரஸ் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வெங்காயம் மருத்துவ குணங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகும். ஆண்டி ஆக்சிடென்ட், கந்தக கலவைகள் கொண்ட வெங்காயம் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளதால், புற்று செல்களை தேடி அழிக்கும். நார்ச்சத்து நிறைந்த வெங்காயம் செரிமானத்திற்கு உதவும். உடலில் இருக்கும் நச்சுக்களையும் நீக்கி, மலச்சிக்கல் பிரச்சனைகளை சரி செய்யும். எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். வெங்காயம் கால்சியம் உறிஞ்சதலை அதிகரிக்க உதவும். வைட்டமின் சி ஆன்டி-ஆக்சிடென்ட் சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி நிறமிகளை சரி செய்து நமது தோற்றத்தை மெருகூட்டும். கோடை காலத்தில் பச்சையான வெங்காயம் சாப்பிடுவது வியர்வை சுரப்பை குறைக்க வழிவகை செய்யும். இதனால் உடல் நீர் ஏற்றத்துடன் இருக்கும். பக்கவாத அபாயத்தையும் குறைத்து நமது உடல் நலனை பாதுகாக்கும். ஒரு சிலருக்கு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் அசிடிட்டி போன்ற பிரச்சனை இருக்கும். அவர்கள் குறைந்த அளவு இதனை எடுத்துக் கொள்ளலாம்.