ஜனவரி 25, பெண்ணாடம் (Cuddalore News): 'என் மண் என் மக்கள்' என்ற பாதையாத்திரை பயணத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தொகுதி மக்களையும் நேரில் சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் (BJP Annamalai) அண்ணாமலை, மக்களின் குறைகளையும் கேட்டறிந்து வருகிறார். நேற்று யாத்திரையின் 79வது நாளினை முன்னிட்டு, அண்ணாமலை கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் தனது பிரச்சாரத்தை தொடங்கி ஸ்ரீமுஷ்ணம், பெண்ணாடம் (Pennadam), திட்டக்குடி ஆகிய நகரங்களில் தனது பாதை யாத்திரை பயணத்தை மேற்கொண்டு இருந்தார். அப்போது, வழிநெடுக அண்ணாமலைக்கு மக்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து, பெண்ணாடம் நகரில் மக்கள் முன்பு உரையாற்றிய பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, ஆளும் திமுக (DMK) அரசுக்கு எதிராக பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து பேசி இருந்தார். இதன் சுருக்கமாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கழித்தும், தமிழகத்தின் எளிய மக்கள் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்ற ஏமாற்றத்தையும், நேர்மையான ஒரு அரசியல் மாற்றம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும், ஆர்வமாகப் பங்கேற்ற பொதுமக்களிடம் உணர முடிந்தது" என கூறியுள்ளார். Thoppur Accident: தருமபுரி தொப்பூர் கணவாயில் மீண்டும் விபத்து; 3 பேர் பலி., நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)