ஆகஸ்ட் 28, காஞ்சிபுரம் (Kanchipuram): காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ள உலகளந்த பெருமாள் (Ulagalantha Perumal Temple Kanchipuram) கோவில், முக்கியமான இந்து சமய கோவில்களில் ஒன்றாகும். இந்து கடவுளான திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகளந்த பெருமாள் கோவில், ஆழ்வார்களின் பாடல்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இக்கோவிலினுள் 108 திவ்வியதேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம், திருநீரகம் ஆகிய தேசங்கள் அமைந்து இருக்கின்றன. ஸ்ரீ ஊரகத்தான் சன்னதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ கார்வானப் பெருமாள் சன்னதி அமைந்த ஒரே கோயிலாகவும், திருமழிசை ஆழ்வாரால் பாடம்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் இருக்கிறது. Vinayagar Chathurthi 2024: ஆணை முகத்தானை சிறப்பிக்கும் விநாயகர் சதுர்த்தி 2024; ஆன்மீக பக்தர்களே ரெடியா?.! முழு விபரம் இதோ.!
17 ஆண்டுகளுக்கு பின் குடமுழுக்கு:
வரலாற்று சிறப்புமிக்க, பண்பாடு மிக்க கோவிலில் கடந்த 2007ம் ஆண்டு கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, தற்போது குடமுழுக்கு நடக்க விறுவிறுப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. உலகளந்த பெருமாளின் சன்னதி, ஆரணவல்லித்தாய் சன்னதி, ராஜகோபுரம், விமானங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பின்னர் புதன்கிழமையான இன்று காலை 10:30 மணிமுதல் 11:30 மணிக்குள் திவ்விய மந்திரங்கள், பாசுரம் ஒலிக்க, யாக சாலைகள் அமைக்கப்பட்டு குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், பாதுகாப்பு பணிகளை காவல்துறையினரும் சிறப்பாக மேற்கொண்டு இருந்தனர்.
காஞ்சி உலகளந்த பெருமாள் கோவில் குடமுழுக்கு விழா நேரலை காணொளி இணைப்பு:
வீடியோ நன்றி: ஜோதி டிவி