ஏப்ரல் 04, சென்னை (Chennai): சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருப்பதாலேயே பலராலும் கேரட் விரும்பி சாப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட கேரட்டை சிறப்பிக்க, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 4 ஆம் தேதி சர்வதேச கேரட் தினம் (Carrot Day) கொண்டாடப்படுகிறது. உலகளவில் 85 சதவீத கேரட் கலிஃபோர்னியாவில் தான் உற்பத்தியாகிறது. WhatsApp Down: அனைவரையும் வாட்டி எடுத்த வாட்ஸ்அப்.. என்னப்பா ஆச்சு?.!
வைட்டமின் ஏ, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்கள் கேரட்டில் அதிகமுள்ளது. இதை சாப்பிட்டதும் உடனடியாக ரத்த சர்க்கரை ஏறாது. கோடைக் காலத்தில் சூரிய வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். கேரட் ஒரு சிறந்த நீரோட்டமுள்ள காய்கறி. இதன் எடையில் சுமார் 88 சதவீதம் நீர் உள்ளது.