ஏப்ரல் 04, புதுடெல்லி (New Delhi): இன்று அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் முதலிடம் வகிக்கிறது. இப்போது வாட்ஸ் அப் (WhatsApp) அலுவலகம், குடும்பம் என பல குழுக்களைக் கொண்டுள்ளது. அதில், நண்பர்கள் குழுக்கள் பொதுவாக எல்லா வகையான விஷயங்களைப் பற்றியும் விவாதிப்பார்கள். வாட்ஸ்அப் உலகம் முழுவதும் தனிப்பட்ட விசயங்களுக்காக மட்டுமல்ல, தொழில்முறை வேலைகளுக்காகவும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலிகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. BJP Annamalai Election Campaign In Coimbatore: பாஜக தலைவர் அண்ணாமலை கோவை வருகை.. உற்சாகமாக நடனமாடி வரவேற்ற மூதாட்டி..!
இந்நிலையில் நேற்று இரவு திடீரென இன்ஸ்டாகிராம் (Instagram), வாட்ஸ்அப் செயலிகள் முடங்கியது. இந்த சம்பவம் இரவு 11.45 மணியளவில் நிகழ்ந்ததால் ஆயிரக்கணக்கான பயனாளர்கள் என்ன நடந்தது என தெரியாமல் சிரமப்பட்டனர். இதையடுத்து உடனடியாக வாட்ஸ்அப் நிறுவனம், ‛‛சில மக்கள் வாட்ஸ்அப்பில் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. 100 சதவீதம் அனைவரும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை உடனடியாக செயல்படுத்தப்படும்'' என தெரிவித்தது. பின்னர் மெட்டா (Meta) நிறுவனம் செயலியில் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்த சில மணி நேரங்களில் சரி செய்தது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக இந்த செயலிகள் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.