Matka Dance Death in Rajasthan (Photo Credit: @priyarajputlive X)

ஏப்ரல் 26, ஜுன்ஜுனு (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜுனு மாவட்டம், நவல்கர்க், லோச்வா பகுதியை சேர்ந்தவர் கமலேஷ். இவர் நாவல்கர்க் (Jhunjhunu Matka Dance Heart Attack Death) பகுதியில் செயல்பட்டு வரும் கியாஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 21ம் தேதி கமலேஷின் நெருங்கிய உறவினர் மகனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. கமலேஷ் மணமகனின் மாமா ஆவார்.

பாரம்பரிய மட்கா நடனம்: இந்நிலையில், திருமண கொண்டாட்டத்தின் போது, கமலேஷ் குடும்பத்தின் பாரம்பரியப்படி திருமண நிகழ்வுகள் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அச்சமயம் உற்சாக மிகுதியில் இருந்த கமலேஷ், மட்கா நடனம் ஆடி இருக்கிறார். மட்கா நடனம் என்பது தலையில் பானை ஒன்றை நீருடன் வைத்து ஆடும் பாரம்பரிய நடனம் ஆகும். திருமண கொண்டாட்டத்தில் உற்றார்-உறவினர்கள் சூழ்ந்திருக்க மட்கா நடனம் நடைபெற்றது. Prakash Raj Casting Vote: இந்திய தேர்தல்கள் 2024: "இந்த வேட்பாளரை தேர்வு செய்யுங்கள்" - வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவுரை.! 

உற்சாகத்துடன் நடனமாடிய நபர் மரணம்: நடனம் ஆடிய பெண்களுடன் இணைந்து கமலேசும் நடனமாட, சற்றும் எதிர்பாராத விதமாக அவர் மயங்கி விழுந்தார். பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, கமலேஷின் உயிர் மாரடைப்பால் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் சோகத்திற்கு உள்ளாகிப்போயினர்.

வைரலாகும் வீடியோ: அனைவரிடமும் இயல்பாக எளிமையுடன் பழகும் குணம்கொண்ட கமலேஷ், எப்போதும் கலகலப்புடன் இருக்கும் நபராக வலம்வந்துள்ளார். அவரின் மறைவை தங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை என உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர். தற்போது சமூக வலைத்தளங்களில் கமலேஷ் நடனமாடியவாறு உயிரிழந்த காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.