Vegetable in Fridge (Photo Credit : freepik)

ஜூலை 09, சென்னை (Health Tips Tamil): வீடுகளில் ஃப்ரிட்ஜ் இருப்பது பலருக்கும் வரப்பிரசாதம் ஆகிவிட்டது. பழைய சாதம், காய்கறிகள், குளிர்பானங்கள் போன்றவற்றை வீட்டிலேயே இருப்பு வைத்து பலரும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருட்கள், பால் பொருட்கள் போன்றவை கெட்டுப்போகாமல் இருக்க பிரிட்ஜ் பயன்படுகிறது. இதனால் உணவுப்பொருட்கள் வீணாவதை தடுக்க முடியும். ஆனால் பிரிட்ஜில் வைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியமானதா? என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பெண் குழந்தையிடம் இந்த மாற்றம் தெரியுதா? பருவமடைவதை உணர்த்தும் அறிகுறிகள்.. தாய்மார்களே கவனிங்க.! 

காய்கறிகளை பிரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும்?

ஆயுர்வேதத்தின்படி, உணவை தயாரித்த சில மணி நேரங்களில் அதனை சாப்பிட்டு விடுவது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக ஃப்ரிட்ஜ் பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், அது தொடர்பான சந்தேகங்களும் எழுகின்றன. பிரிட்ஜை பொருத்தவரையில் பிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவில் சுவை விஷயத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் காய்கறிகள் மீது ஒரு சில சமயங்களில் எதிர்வினை மாற்றங்கள் இருக்கும்.

கிருமி பரவாமல் இருக்க என்ன செய்யலாம்?

உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நாம் பிரிட்ஜில் வைப்பதால், அதிக நாட்கள் வரை தாங்கும். இதனால் பாக்டீரியா வளர்ச்சி அடைவதில்லை. அதே நேரத்தில் பிரிட்ஜில் நாம் ஒரு பொருளை வைக்கும் முன்னர் அதில் நுண்ணுயிரி ஏதேனும் இருக்கிறதா? என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆகையால் காய்கறிகளை கழுவி விட்டு பின் பிரிட்ஜில் சேமித்து வைப்பது நல்லது. இது ஃப்ரிட்ஜில் மேற்படி கிருமிகள் பரவாமல் இருக்கவும் உதவும். மேலும் உணவை கைகளால் தொட்டு சேமிக்க கூடாது. அதற்கான தனி பாத்திரங்களை பயன்படுத்தி சேமிக்கலாம்.