TN Ration Palm Oil (Photo Credit : Youtube / Pixabay

ஜூலை 02, சென்னை (Health Tips Tamil): வீட்டில் சமையல் செய்ய பிரதானமாக பயன்படுத்தப்படும் எண்ணெயில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலெண்ணெய் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்துவார்கள். இவற்றில் ஒன்றாக உள்ள ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் பாமாயில் எண்ணெய் பல வீடுகளில் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. பல ஹோட்டல்கள், நிறுவனங்கள் பாமாயிலை திரைமறைவில் பெற்று உணவு பொருட்களை சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றன. பாமாயில் உடலுக்கு நல்லதா? கேடானதா? என பலருக்கும் குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள் இருக்கின்றன. இதுகுறித்து உணவு ஆலோசகர்கள் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய் - பாமாயில் எண்ணெய் வித்தியாசம் என்ன?

அதன்படி சர்வதேச அளவில் 40% பாமாயில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. சிவப்பு நிற பழத்திலிருந்து பெறப்படும் பாமாயில் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பாமாயிலில் 45% பால்மெடிக் அமிலம் இருக்கிறது. இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்பு ஆபத்தானது என்ற கருத்தானது மக்களிடையே பரவலாக நிலவி வருகிறது. ஆனால் பாமாயிலில் மட்டுமல்லாது தேங்காய் எண்ணெயிலும் 90% சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதன் காரணமாகவே குளிர்காலங்களில் தேங்காய் எண்ணெய் கட்டிபடுகிறது.  குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்குறீங்களா?.. பெற்றோர்களே கவனமா இருங்க.!

பாமாயில் நல்லதா?

தேங்காய் எண்ணெயை ஒப்பிடும் போது பாமாயிலில் சாச்சுரேட்டட் கொழுப்பு விகிதம் என்பது குறைவாக இருக்கிறது. தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புகளில் ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் அதிகம் இருக்கின்றன. இதனால் தேங்காய் எண்ணெயை தாராளமாக சமையலுக்கு பயன்படுத்தலாம். கடலை எண்ணெயில் 20% உள்ளது. ஆரோக்கிய கொழுப்புகளான மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் தேங்காய் எண்ணெயில் 5%, கடலை எண்ணெய், பாமாயிலில் 45% இருக்கின்றன.

இந்த வகை கொழுப்புகள் உடலுக்கு கேடான கொழுப்புகளை குறைக்கும் தன்மை கொண்டாலும், அதனை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உள்புறங்களில் காயங்களை ஏற்படுத்தும். ஆகையால் எண்ணெயை எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் அது பிரச்சனை இல்லை. அதில் அளவு என்பது மிக முக்கியமாகும்.