செப்டம்பர் 04, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் அண்ணா, இளைய தளபதி உட்பட பல பட்டங்கள் கொண்டு அழைப்பது இயல்பு. திரையுலகில் கோலோச்சி இருந்த இயக்குனரின் மகனாக இருந்தாலும், பல ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து தன்னை அவர் திரையுலகில் தக்கவைத்து இருக்கிறார். தற்போது அரசியல் பிரவேசமும் தொடங்கியுள்ளது.
தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களை, அதன் தயாரிப்புக்கு ஏற்ப நிறை-குறைகளைச்சொல்லி விமர்சித்து பிரபலமானவர் புளூ சட்டை மாறன் என்ற இளமாறன். குறைந்த பட்ஜெட் படங்களாக இருந்தாலும் சரி, கூடுதல் பொருட்செலவு படமாக இருந்தாலும் சரி, தனது கருத்தை அப்பட்டமாக தெரிவிக்கும் குணம் கொண்ட மாறனை, திரைபடந்தை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் தங்களது நடிகரின் படத்தை விமர்சித்தபின் மாறனை வறுத்தெடுத்த காலங்கள் இருக்கின்றன.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் குறித்த அவரின் விமர்சனமும் வெளியானது. ஆனால், படத்தின் வெளியீடுக்கு முன்பே ஜெயிலருக்கு ஆதரவாக பேசிய சில யூடியூப் விமர்சகர்கள் குறித்து மாறன் பதிவு செய்த தகவலை கண்டு ஆத்திரத்தில் பொங்கிய ரஜினி ரசிகர்கள், மாறனை கடுமையாக வசைபாடினர். Trending Video: தாத்தாவுடன் சோபாவில் படுத்து லூட்டி செய்யும் பூனை; கலக்கல் வீடியோ உள்ளே.!
வரைமுறை இன்றி தொடர்ந்த சர்ச்சை செயலால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மாறனும், தனது பங்குக்கு சட்டரீதியான நடவடிக்கைக்கும் புகார் அளித்தார். தனது ட்விட்டர் பக்கத்திலும் ரஜினி மற்றும் அவரின் ரசிகர்களுக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை முன்வைக்க தொடங்கினார்.
இந்நிலையில், திரைப்பட விமர்சகர் மற்றும் ஆண்டி இந்தியன் திரைப்பட இயக்குனர் புளூ சட்டை மாறன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ள தகவலாவது, "ஜோசப் எனும் முன்பெயர்.. பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கிங் மற்றும் செய்யாறு ஓலாக்களுக்கு எரிச்சலை தருவதைப்போல.. அவரது அரசியல் பிரவேச அறிகுறிகளும் சிலருக்கு கடுப்பை கிளப்பியுள்ளன.
இன்னொரு பக்கம்.. இவர்தான் நம்பர் 1 வியாபார மற்றும் வசூல் சக்ரவர்த்தி எனும் உண்மை.. வேறு தரப்பிற்கு பேதியை உண்டாக்கியுள்ளது. சூப் ஸ்டார் பட நிகழ்ச்சியில் விஜய்யின் மாஸ்டர் பாடல் நிறுத்தப்பட்டது. 'பட்டத்தை பறிக்கறாங்க' என்று பாடல் மூலம் அலறி துடித்தார் ஆறிப்போன சூப் ஸ்டார். Young Attacked by Cow: இளைஞனை விரட்டி கொம்புகள் முட்டி தூக்கி, துவம்சம் செய்த மாடு; நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே.!
இதுவரை அந்த உலகமகா பட்டம் பற்றி விஜய் வாய் திறக்கவே இல்லை. ஆனால் சூப்பின் அல்லக்கைகள் எல்லாம் 'தலைவர்தான் ஒரே சூப் ஸ்டார். விஜய்க்குதான் தளபதி பட்டம் இருக்கே? இதற்கு ஏன் ஆசைப்படுகிறார்?' என்று ஓயாமல் உளறுகின்றன.
தற்போது ஜவான் நிகழ்ச்சியில் விஜய் குறித்து அட்லீ பேசியவை கட் செய்யப்பட்டன. ஆக.. மொத்த கரகாட்ட கோஷ்டியும் ஒத்த ஆளை பாத்து பீதியாகி இருக்கீங்க. மிக்க மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக மாறன், வெளிப்படையாக விஜயின் வளர்ச்சியை கண்டு தமிழ் திரையுலகை சேர்ந்தோர் பயத்தில் இருக்கின்றனர். அதேபோல அரசியல் வருகையால் விஜய்க்கு எதிரான பல சூழ்ச்சிகள் நடக்கிறது என்பதையும் அம்பலப்படுத்தி இருப்பதாக விஜயின் ரசிகர்கள் மாறனுக்கு திடீர் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகை பொறுத்தமட்டில் சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு பிரச்சனை என்பது நெடுங்காலமாக நிலவி வருகிறது. பாபாவுக்கு பின் ரஜினியின் வீழ்ச்சி சந்திரமுகியில் சரிசெய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிவாஜி, எந்திரன் என படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்தது. சில தடுமாற்றம் இருந்தாலும் ரஜினி தன்னை விழுந்து எழுந்து ஓடும் குதிரையாக முன்பே பேசி இருந்தார். Coach Running Without Engine: எஞ்சின் இல்லாமல் பின்னோக்கி ஓடிய இரயில்; பதறிப்போன பொதுமக்கள்.. அதிர்ச்சி சம்பவம்.!
தளபதி, தலைவா போன்ற பட்டங்கள் அனைத்தும் ஒருகாலத்தில் ரஜினியின் படைத்தலைப்புகளாக இருந்த நிலையில், காலமாற்றத்தில் இளையதளபதி விஜய் பட்டம் இன்று வரை விஜயுடன் இருக்கிறது. இவ்வுளவு வயதிலும் என்னைக்கண்டு பலரும் பொறாமைப்படுவதாகவும், இந்த குதிரை தள்ளாடும் வயதிலும் ஓடுகிறது என்பதால் பலருக்கு எரிச்சல் இருக்கத்தான் செய்யும் என ரஜினியே பேசி இருக்கிறார்.
அதேபோல, விஜய் நேரடியாக சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு போட்டி செய்தது இல்லை. அவர் அதனை கண்டுகொள்வதும் இல்லை. ஒருசில நேரங்களில் தலைமை ரீதியில் பிரச்சனை எழுந்தால், அடுத்த தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதனை பேசி சரி செய்துகொள்ளும் சூழ்நிலை இருந்தது. இன்றளவில் அவை மாறிவிட்டன.
விஜய் முந்தைய காலங்களில் அளித்த பேட்டியில், அவரின் ஸ்டைலை பார்த்து வந்தவர்கள் நாங்கள், பட்டம் ஆளுக்கு ஒன்று, ஆனால் சூப்பர்ஸ்டார் என்றுமே ரஜினி சார் தான் எனவும் தெரிவித்து இருக்கிறார். நிலைமை இப்படியிருக்க சூப்பர்ஸ்டார் பட்டத்தை பலரும் தங்களுக்கு பிடித்த நடிகர் என உபயோகம் செய்ய தொடங்கி, அது இன்று விஸ்வரூபம் ஆகியிருக்கிறது.
ஜோசப் எனும் முன்பெயர்.. பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கிங் மற்றும் செய்யாறு ஓலாக்களுக்கு எரிச்சலை தருவதைப்போல.. அவரது அரசியல் பிரவேச அறிகுறிகளும் சிலருக்கு கடுப்பை கிளப்பியுள்ளன.
இன்னொரு பக்கம்.. இவர்தான் நம்பர் 1 வியாபார மற்றும் வசூல் சக்ரவர்த்தி எனும் உண்மை.. வேறு தரப்பிற்கு பேதியை… pic.twitter.com/TRaf10EdZq
— Blue Sattai Maran (@tamiltalkies) September 4, 2023