பிப்ரவரி 03, சென்னை (Chennai News): குழந்தையை பிரசவித்த தாய்மார்கள், தங்களின் குழந்தைகளுக்கு பால் ஊட்டுவது தொடர்பாக மருத்துவமனையில் இருக்கும்போது செவிலியர், மருத்துவர் அறிவுரைப்படி செயல்பட்டாலும், வீட்டிற்கு வந்தபின் சில நேரம் பல சந்தேகங்கள் எழுவதும் உண்டு. அந்த வகையில், குழந்தைகள் பால் குடித்தபின், அவர்களின் மூக்கு, வாய் பகுதியில் இருந்து திடீரென பால் வெளியேறியும். இதனை சிலர் எதுக்களிப்பது, ஓங்கரிப்பது என கூறுவார்கள். இன்று அதுகுறித்து தெரிந்துகொள்ளுங்கள். கர்ப்ப காலத்தினைப்போல குழந்தையின் ஒன்று முதல் இரண்டு வயது வரையில், பெற்றோர் கவனமாக இருப்பது நல்லது. குழந்தைகள் பேசத்தொடங்கும் வரை அந்த கவனம் என்பது குழந்தைகள் மீது இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளால் தனது உடலில் ஏற்படும் மாற்றத்தை, உடல்நலக்குறைவை வாய்விட்டு சொல்ல இயலாது. குழந்தைகள் தாய்ப்பால் குடித்ததும் வாந்தி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். இது பலவீனமான செயல்முறை அறிகுறி ஆகும். Lay's Potato Chip: லேஸ் சிப்ஸ் சாப்பிடுவதால் உடலில் வரும் பிரச்சனைகள் என்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே..!
வாய், மூக்கில் இருந்து வெளியேறும் பால்:
அதேபோல, பல நேரத்தில் குழந்தைகள் பாலின் அளவு தெரியாமல், தனது தேவையை விட அதிக பால் குடிப்பார்கள். இதனால் குழந்தையின் வயிறு தேவைக்கு அதிகமாக பால் இருப்பதை உறுதி செய்து, மீதமுள்ளதை தானாக வெளியேற்றும். இரைப்பை உணவுக்குழாயின் வாயிலாக பால் வெளியேறுவது கிரெட் என மருத்துவ நிலையில் அழைக்கப்படுகிறது. இதனால் வாய், மூக்கு வாயிலாக குழந்தைகள் குடித்த பால் வெளியேறுகிறது. குழந்தை பால் குடிக்கும்போது தலை கீழ்நோக்கி இருப்பது, குழந்தை சரியாக பிடிக்கப்படாமல் இருப்பது போன்றவையும் பால் தொண்டையில் சிக்கும் நிலை ஏற்படும். இதனாலும் சில நேரத்தில் மூக்கு, வாய் வழியே பால் வெளியேறும். குழந்தையின் செரிமான அமைப்பு வளர்ச்சியடையவில்லை என்றாலும், இப்பிரச்சனை இருக்கும். இதனால் பால் மூக்கு, வாய் பகுதியில் இருந்து வெளியேறும். இந்த பிரச்சனையை தவிர்க்க குழ்நதையை சரியான நிலையில் வைத்து உணவளிக்கலாம். பாலுட்டும்போது தலையை உயர்த்தி பிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக பால் கொடுக்க வேண்டும்.
குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.