
ஜனவரி 10, சென்னை (Health Tips): இந்திய சமையலில் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் முக்கியமானது வெண்டைக்காய். சாம்பார், காரக்குழம்பு, பொரியல், சுவையான சாதம், வத்தல் என பலவகைகளில் வெண்டைக்காயை நாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் தன்மை கொண்ட வெண்டைக்காயில், அசாத்தியமான அளவு நன்மைகள் நிறைந்து கிடக்கின்றன. இன்று வெண்டைக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
மூளைக்கு புத்துணர்ச்சி:
நாம் சாப்பிடும் வெண்டைக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் கே, கார்போ ஹைட்ரேட், கொழுப்பு, புரதம், கால்சியம், இரும்புசத்து ஆகியவை இருக்கின்றன. வழவழப்புத்தன்மை கொண்ட வெண்டைக்காயில் பெக்டின், கோந்து தன்மை அதிகம் உள்ளது. குழந்தைகள் அவ்வப்போது வெண்டைக்காயை உணவில் சேர்த்து வர, அவர்களின் நினைவாற்றல் அதிகமாகும். மூளை செயல்பாடு அதிகமாகி, மூளைக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கும்.
உடலில் தேவையற்ற கொழுப்புகள் வெளியேறும்:
புற்றுநோய் வளர காரணமாக அமையும் செல்களை தேடி அழிக்கும் தன்மை கொண்ட வெண்டைக்காய், புற்றுநோய் உடலில் பரவும் தீவிரஹய்ம் குறையும். வெண்டைக்காயில் இருக்கும் போலிக் அமிலமானது, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகசிறந்த தேர்வாக அமைகிறது. உடலின் எடையை குறைக்க விரும்புவோர், கட்டாயம் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வெண்டைக்காய் உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைக்க உதவி செய்கிறது. தேவையில்லாத கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றும். Masala Bread Recipe: காரசாரமான மசாலா பிரெட் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்:
உடலின் இரத்தத்தை அதிகரிக்கவும், இரத்த கொழுப்புகளை பராமரிக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. புதிய இரத்த செல்கள் வெண்டைக்காய் சாப்பிட்ட பின்னர் உருவாகும் என்பதால், இரத்த சோகை பிரச்சனையும் குணமாகும். இதயம் சார்ந்த நோய்களை சரிசெய்யவும் உதவுகிறது. இதில் நிறைந்து கிடைக்கும் நீர்சத்து, உடலை குளிர்ச்சியுடன் வைக்க உதவி செய்கிறது. இதனால் வாய்ப்புண், குடல் புண் குணப்படுத்தப்படும். உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
ஆஸ்துமா குறையும்:
இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு சீராகி இருப்பதால், உடல் நலன் மேம்படும். கால்சியம் எலும்பின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. பார்வைத்திறனும் மேம்படும், கண்கள் சார்ந்த பிரச்சனையும் கட்டுப்படும். சருமத்தில் இருக்கும் சுருக்கம் சரியாகும். வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை பருக்களை தடுக்கும். வெண்டைக்காயை ஊறவைத்து அந்நீரை குடிப்பது மலச்சிக்கல், குடலிறக்கத்தை சரி செய்யும். சுவாசம், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.