மார்ச் 08, புதுடெல்லி (New Delhi): சிவராத்திரி நன்னாளில் கண்விழித்து சிவபெருமானை வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகும்; கர்ம வினைகள் யாவும் நீங்கும் என விவரிக்கிறது சிவ புராணம்.
லிங்கோத்பவ காலம்: குறிப்பாக இரவு 11.30 மணியில் இருந்து நள்ளிரவு 1 மணி வரை சிவபெருமானை வழிபடுவது மிகமிக சிறப்பான காலமாக கூறப்படுகிறது. இதை பக்தர்கள் கடைப்பிடிக்கலாம். ஏனென்றால் இந்த நேரத்தில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமானை வழிபட கூடிய நேரமாகும். 'லிங்கோத்பவ காலம்' எனும் இந்த நேரத்தை தவற விடக்கூடாது. PM Modi Announce LPG Cylinder Price Deduction: மகளிர் தினத்தில் உற்சாக செய்தி; சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.!
வீட்டில் பூஜை செய்வது எப்படி?: எல்லோராலும் கோவிலுக்கு செல்ல முடியாது. கோவிலில் சிவனுக்கு நடைபெறும் அபிஷேகத்தை காண முடியாதவர்கள் நம்முடைய வீட்டிலேயே பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து இரவு முழுவதும் சிவபுராணம் படிக்கலாம். நமச்சிவாய மந்திரத்தை சொல்லி வில்வ இலையால் அர்ச்சனை செய்யலாம்.