Divorce | Court Judgement (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 15, மும்பை (Mumbai News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணத்திற்கு முன்பு பெண்ணுக்கு தீராத நோய் ஏற்பட்டு இருக்கிறது. இதனை மறைத்து திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த கணவர் தனக்கு விவாகரத்து கேட்டு நாக்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மேலும், திருமணத்திற்கு முன்னரே மனைவிக்கு இருந்த நோய் குறித்த தகவலை மறுத்ததாகவும் குற்றசாட்டை முன்வைத்து இருந்தார். Kansas City Gunfire: பேரணியில் திடீர் துப்பாக்கிசூடு; ரேடியோ பேச்சாளர் பலி., 22 பேர் படுகாயம்.! 

தமிழ் பழமொழியில் 999-ஐ குறைத்து ஒரு பொய்சொல்லி திருமணம்: விசாரணையில், சம்பந்தப்பட்ட பெண்மணி திருமணத்திற்கு முன்னரே பிடோசிஸ் எனப்படும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நோயின் காரணமாக அவதிப்பட்டது பெற்றோருக்கு தெரியவந்தது உறுதி செய்யப்பட்டது. திருமணத்திற்கு முன்பு கணவரிடம் எந்த விதமான உண்மையையும் சொல்லாத பெண்தரப்பு, திருமணத்தை நடத்திவைத்துள்ளது தெரியவந்தது. நீதிபதிகள் பெண்ணின் உடல்நலக்குறைபாடை நேரடியாக சோதனை செய்த நிலையில், அவை தாம்பத்திய விசயத்திற்கு தடையாக இருக்காது எனினும், தன்னிடம் இருந்த பிரச்சனையை மறைத்து ஒருவரை திருமணம் செய்து வைத்ததை ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் குறிப்பிட்டனர். கடந்த 2017 மே 18 அன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

விவாகரத்து வழங்கிய நீதிபதிகள்: இவர்கள் திருமணம் முடிந்த 3 மாதங்களில் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். பெண்மணி உறங்கிக்கொண்டு இருந்தாலும் அவரது இடது கண்கள் எப்போதும் திறந்த நிலையிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாக்பூர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் தரப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தபோதும், நீதிபதிகள் கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர்.