சிறுவயது கர்ப்பத்தால் பாதிக்கப்படும் சிறுமிகள்; காரணங்கள் என்னென்ன?.. நெஞ்சை பதறவைக்கும் ரிப்போர்ட்.!
Teenage Pregnancy | Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

மே 16, புதுடெல்லி (Health Tips): நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான குற்றங்கள் அதிகஅளவு நடந்து வருகின்றன. இந்த குற்றங்களுக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டாலும், பாலியல் கல்வி மற்றும் பாலியல் ரீதியான அறிவு போன்றவையின் விழிப்புணர்வின்மையால் தொடர் குற்றங்கள் நிகழுகின்றன.

இந்தியாவை பொறுத்தமட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், குழந்தை திருமணங்கள் போன்றவை தொடர்ந்து நடக்கின்றன. சில வெளியுலகுக்கு தெரியவந்து வழக்குகளை சந்திக்கிறது, இன்னும் சில திரைமறைவில் நடக்கத்தான் செய்கின்றனர்.

இவ்வாறான இளவயது திருமணம் மற்றும் பாலியல் வன்கொடுமையால், அதனை எதிர்கொள்ளும் சிறுமிகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். இவற்றில் சிறுவயதில் கர்ப்பம் கூடுதல் கவலையை அளிக்கும் விசயங்கைளை ஒன்றாகும். Kenya Cult Issue: தோண்டத்தோண்ட 200 சடலங்கள்.. சொர்க்கத்திற்கு போக பாதிரியாரை நம்பி பட்டினியாக, உயிருடன் புதைக்கப்பட்ட மக்கள்.. கென்யாவில் பயங்கரம்.!

குழந்தை திருமணம், பாலியல் பலாத்காரம், அறியாவயது காதல்-கர்ப்பம் போன்றவை சிறுமிகளுக்கு கர்ப்பத்தை தாங்கும் சக்தியை உடலுக்கு கிடைக்காமல் அவதிப்பட வைக்கிறது. இவை ஆரோக்கியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. தற்போது நடைபெற்ற ஆய்வு ஒன்றில், குழந்தை திருமணத்திற்கு ஆளாகும் 5 சிறுமிகளின் 3 பேர் சிறுவயதில் கர்ப்பம் ஆகின்றனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சந்தோலி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பர்பானி, ஒடிஷாவில் உள்ள கந்தமால் ஆகிய இடங்களில் இருக்கும் 40 இடங்களில் நடைபெற்ற ஆய்வில், குழந்தை திருமணம் மற்றும் பிற்போக்கு நடவடிக்கை, பாலின சமத்துவம் இன்மை போன்றவை இருப்பது உறுதியானது.

வறுமையான வாழ்க்கை நிலை, பிற இடங்களுக்கு குடிபெயர்தல், காதல் மாயையில் மகளின் முடிவு குறித்த பயம், திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் குறித்த பயம் என பல விஷயங்கள் குழந்தை திருமணத்திற்கு காரணியாக அமைகின்றன. குழந்தை திருமண பாதிப்புகள் 16% பெற்றோருக்கும், 34% சிறார்களுக்கும் புரிந்துள்ளது. எஞ்சியோர் சிரமத்தில் இருக்கின்றனர் அல்லது சிரமப்படுத்தப்படுகின்றனர்.