மே 08, புதுடெல்லி (New Delhi): ஏர் இந்திய விமான நிறுவனம், உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான விமானங்களை இயக்கி வரும் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். பணிகள் ஒருங்கிணைப்பும் திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மிகக்குறைந்த விலையிலும் அதனை சேவை தொடருவதால் பலராலும் விரும்பப்படுகிது.

70 விமானங்கள் ரத்து: இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, நிறுவனத்தின் செயல்பாடுகளை இயக்கும் மூத்த தலைவர் ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் விடுப்பு எடுத்து இருக்கிறார். இதனால் நிர்வாகத்தை அவருக்கு கீழ் உள்ள பணியாளர்கள் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு, அதன் விளைவாக 70 விமானங்களை அடுத்தடுத்து ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். AstraZeneca Withdrawn Covid 19 Vaccine: உலகளவில் தனது கோவிட் 19 தடுப்பூசிகளை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனெகா: பக்கவிளைவுகளால் நடவடிக்கை.! 

வான்வழி போக்குவரத்து அமைச்சகம் விசாரணை: உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான வழித்தடத்தில் இயங்கும் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, சில விமானங்களின் புறப்பாடு தள்ளிவைக்கப்பட்டது. கட்டணத்தொகையை பெறவிரும்பிய நபர்களுக்கு பணமும் திரும்பி வழங்கப்பட்டது. இந்த விஷயம் புதன்கிழமை அதிகாரி பணிக்கு வந்ததும் சரி செய்யப்பட்டாலும், 70 விமானங்கள் ரத்து செய்தது தொடர்பாக வான்வழி போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.