Morning Walking (Photo Credit; Pixabay)

ஜூன் 05, சென்னை (Health Tips): காலை நேரத்தில் நாம் எழுந்ததும் நினைவுக்கு வரவேண்டியது நடைப்பயிற்சி செய்வது தான். இதனை பெரும்பாலானோர் விரும்ம்புவது இல்லை என்பதே நிதர்சனம். பிற உடற்பயிற்சியை காட்டிலும், நமது உடலில் இருக்கும் கலோரிகளை எரிப்பதில் முக்கிய பங்கு நடைப்பயிற்சி உண்டு. காலையில் எழுந்து நாம் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு பல நன்மைகளை தரும்.

உடல் ஆற்றல்: நடைப்பயிற்சி செய்வது உடலை சோர்வாக மாற்றத்தை சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது உடலில் உள்ள ஆற்றலின் அளவை அதிகரிக்க வழிவகை செய்யும். உடற்பயிற்சியின் போது உடல் சீரான இயக்கத்தில் இருக்கும் காரணத்தால், நிலையான ஆற்றல் தேவைப்படும். செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். இதனால் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். குறைந்தது 20 முதல் 30 நிமிடம் நடக்கலாம். உறக்கம் வராமல் இருப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்த்துவிட்டு, படிக்கட்டில் 10 நிமிடம் நடக்கலாம்.

மனநிலை மேம்பாடு: நாம் தொடர்ந்து வேலை செய்வது, அதே வழக்கத்தினை பின்பற்றுவது உடல் மற்றும் மனசோர்வுக்கு வழிவகை செய்யும். காலை நேரத்தில் நாம் எழுந்து நடப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, மனநல ஆரோக்கியத்திற்கும் வழிவகை செய்யும். ஏனெனில் நடைப்பயிற்சி உடல் உறுப்புகளை இயக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலினை வழங்கும். ஹார்மோன் உற்பத்தி செய்ய, நேர்மறை மனநிலையை பேண, சுயமரியாதை மேம்படுத்த, பதற்றத்தை குறைக்க, மனசோர்வை கட்டுப்படுத்த உதவும். மனநல பிரச்சனை இருப்போர் காலை 20 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். Car Accident: கார் டயர் வெடித்து நடந்த சோகம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாப பலி.! கிராமமே கண்ணீர்.!

எடை இழப்பு: காலை நேரத்தில் நாம் நடைப்பயிற்சி செய்தால், உடல் எடையை குறைக்க உதவி செய்யும். நடைப்பயிற்சி உடல் கலோரியை குறைக்க உதவும். 30 நிமிட காலைநேர நடைப்பயிற்சி, 400 கலோரிகளை எரிக்க உதவி செய்யும். காலை நேரத்தில் வயிறு வெறுமையாக இருந்து, ஆற்றலை உற்பத்தி செய்ய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும்.

உடல்நல பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி: நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை மேம்படுத்த காலைநேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம். இதனைத்தவிர்த்து வைரஸ் நோய்கள், பாக்டீரியா போன்ற தொற்றுகளில் இருந்து விலகவும் உதவும். சுவாச உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படுத்தப்படும். நாளொன்றுக்கு 30 நிமிடம் நடந்தால் நீரிழிவு, இதயநோய் அபாயம் குறையும்.