Doddabetta (Photo Credit: @Ooty_FC X)

மே 23, ஊட்டி (Nilgiris News): கோடைகாலம் என்றாலே நமது ஊர் மக்கள் குளுகுளு சூழ்நிலையை அனுபவிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு பயணிப்பது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டின் உயரமான சிகரங்களில் ஒன்றான தொட்டபெட்டாவுக்கு (Doddabetta) அதிக சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது இயல்பு. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி - கோத்தகிரி சாலையில் இருக்கும் தொட்டபெட்டா, மிக உயரிய சிகரமாகவும் கவனிக்கப்படுகிறது.

ரம்மியான காட்சியை தரும் சிகரம்: தொட்டபெட்டாவில் இருக்கும் தொலைநோக்கி உதவியுடன் ஒட்டி நகரம், அவலாஞ்சி, குன்னூர் போன்ற நகரங்களையும் கண்டுகளிக்கலாம். சுற்றுலா பயணிகள் செல்லும் நேரத்தில் பனிமூட்டம் இல்லாத பட்சத்தில், அது ரம்மியமான காட்சியாகவும் அமையும். இதனாலேயே ஊட்டிக்கு வரும் பலரும் தொட்டபெட்டா வந்து செல்வார்கள். இந்த சிகரத்திற்கு செல்ல, கோத்தகிரி சாலையில் இருந்து 3 கி.மீ வனத்துறை சாலை வழியே பயணம் செய்ய வேண்டும். நுழைவு வாயிலில் வனத்துறை கட்டணத்தை கொடுத்துவிட்டு மேற்படி பயணிக்கலாம். RR Vs RCB Highlights: கனத்த இதயத்துடன் வெற்றியை தவறவிட்ட பெங்களூர்; அசத்தல் ஹைலைட்ஸ் இதோ.! 

பாஸ்ட் டேக் பொருத்தும் பணிகள் தீவிரம்: கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் தொட்டபெட்டா செல்லும் வாகனங்களுக்கான நுழைவு கட்டணம் வசூல் செய்யும் முறையில் பாஸ்ட் டேக் அறிமுகம் செய்யப்பட்டது. சீசன் நேரங்களில் ஏற்படும் வாகன நெரிசலை குறைக்க, பாஸ்ட் டேக் கட்டணம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இப்பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு கடந்த வாரம் முதல் நேற்று வரை தொட்டபெட்டாவுக்கு சுற்றுலாப்பயணிகள் வாகனங்கள் அனுமதி செய்யப்படவில்லை. இந்நிலையில், நேற்றுடன் பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றது. இதனால் இன்று முதல் தொட்டபெட்டாவுக்கு சுற்றுலாப்பயணிகள் வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒருவாரத்திற்கு பின் மீண்டும் அனுமதி: கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தொட்டபெட்டா சிகரம் செல்வதற்கான வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்ய பாஸ்ட் டேக் எனப்படும் மின்னணு பரிவர்த்தனை தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. சீசன் சமயங்களில் நுழைவு கட்டணம் செலுத்தி செல்வதற்காக ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். இதனால் ஊட்டி – கோத்தகிரி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதை தடுக்க நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்தை மாற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்தது. நுழைவாயில் பகுதியில் இருந்து சிகரத்திற்கு செல்லக்கூடிய சாலையில் பாஸ்ட் டேக் நுழைவு கட்டண வசூல் மையம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் தொடங்குவதால் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை 7 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா செல்ல அனுமதியில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.