ஆகஸ்ட் 18, சென்னை (Health Tips Tamil): தலைவலி, காய்ச்சல், உடல் வலி உட்பட பல்வேறு விஷயங்களுக்கு ஒவ்வொருவரும் பாரசிட்டமால் மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை என்று பயன்படுத்துகிறோம். இந்த விஷயம் மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்ப காலத்தில் பாரசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொள்வது குழந்தையின் நரம்பியல் சார்ந்த வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. Vinayagar Chaturthi 2025: விநாயகர் அருளைப்பெற உகந்த நேரம், வழிபடும் முறை.. 2025 விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு பற்றி தெரிஞ்சிக்கோங்க.!
மூளை வளர்ச்சிக்கு இடையூறு:
அமெரிக்காவில் உள்ள மவுண்ட் சினாய் மருத்துவ பள்ளியில் ஆராய்ச்சியாளர்கள் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் பரிசோதனை செய்து இது தொடர்பான ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பாரசிட்டமால் மாத்திரையின் மருந்து குழந்தையின் நஞ்சுக்கொடி வழியாக கருவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இது குழந்தையை அடைந்தபின் மூளையின் வளர்ச்சிக்கு இடையூறுகளை ஏற்படுத்தும். ஆட்டிசம், கவனக்குறைபாடு போன்றவை குழந்தை பிறந்தபின் ஏற்படலாம் என மருத்துவர்களால் எச்சரிக்கப்படுகிறது. Paracetamol Tablets: காய்ச்சல், தலைவலி என பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துறீங்களா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
மருத்துவரின் ஆலோசனை முக்கியம்:
ஆகையால் மருத்துவரின் அறிவுரை இன்றி கர்ப்பகாலத்தில் பாரசிட்டமால் மாத்திரையை உட்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது ஆக்சிஜனேற்ற பிரச்சனை, ஹார்மோன் சீர்குலைவு, மூளை வளர்ச்சி என மரபணு நடத்தையில் ஒரு சிலவற்றை மாற்றுவதும் பாராசிட்டமால் மாத்திரையால் நிகழும் என சொல்லப்படுகிறது. இதனால் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முடிந்தளவு பாராசிட்டமால் மாத்திரை பயன்பாடுகளை குறைக்க வேண்டும் அல்லது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.