டிசம்பர் 15, சென்னை (Health TIps): பருவகாலங்கள் வந்துவிட்டாலே பலருக்கும் (Rainy Season Diseases) காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவை ஏற்படத் தொடங்கிவிடும். மேலும், மழை காலங்களில் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளுக்கு பலரும் மருத்துவமனைக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடி மருந்தகத்தில் சுயமாக பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனை வலி நிவாரணியாக பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
சிறுநீரக கோளாறு:
இவ்வாறான பாராசிட்டமால் மாத்திரைகள், பல்வேறு ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்ட நிலையில், அவை உட்கொள்ள தகுதி இல்லாத மாத்திரைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், 65 வயது மேற்பட்ட நபர்களுக்கு இரைப்பை, குடல், இதயம், சிறுநீரகம் சார்ந்த கோளாறுகள் ஏற்படும் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. Ragi Pakoda Recipe: குழந்தைகளுக்கு பிடித்தமான சத்தான ராகி பக்கோடா செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
1,80,000 பேரிடம் ஆய்வு:
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஹாம் பல்கலைக்கழகத்தில், பாராசிட்டமால் மாத்திரை கொண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், பாராசிட்டமால் மாத்திரையை உட்கொள்ளும் 1,80,000 பேரின் உடல்நலம் பரிசோதனை செய்யப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அப்போது ஆய்வாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
கவனம் தேவை:
அதாவது, பாராசிட்டமால் மாத்திரைகளை அவ்வப்போது பயன்படுத்துவோரின் உடலில் வயிற்றுப்புண், இதய செயலிழப்பு, இரத்த அழுத்த பிரச்சனை, நாட்பட்ட சிறுநீரக பிரச்சனை போன்ற அபாயங்கள் அதிகரித்து இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதனால் பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துவோர் சற்று கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக பருவகாலங்களில் ஏற்படும் நோயில் இருந்து தப்பிக்கிறேன் என்ற பெயரில், அவ்வப்போது அதனை எடுப்பது, மருத்துவரின் அனுமதி இன்றி பயன்படுத்துவது நல்லதல்ல.
அவசரத்திற்கு உடல்நலக்குறைவால் மருத்துவரின் அனுமதியோடு ஒரு மாத்திரை எடுத்துக்கொள்வது பிரச்சனை இல்லை எனினும், அதிலும் சில பக்க விளைவுகள் உண்டு. ஒரு மாத்திரைக்கே நிலைமை இப்படி என்றால், சளி, காய்ச்சல் என சுயமாக பாராசிட்டமால் மாத்திரையை புளிப்பு மிட்டாய் போல உட்கொள்ளும் நபர்களின் உடல்நலன் என்னவாகும் என்பதற்கு சாட்சியாக நீங்கள் இருந்துவிடாதீர்கள்.