
ஜூன் 21, சென்னை (Health Tips Tamil): குழந்தைகளுக்கு உடல் ஆற்றலை வழங்குவதில் காய்கறிகள் முக்கியமானது. நோய்களிலிருந்து பாதுகாக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் வைட்டமின், நார்ச்சத்து போன்றவை கிடைப்பதை காய்கறிகள் உறுதி செய்கின்றன. குழந்தைகள் பிற்காலத்தில் பக்கவாதம், இதய நோய், புற்றுநோய் உட்பட பல நோய்களிலிருந்தும் விலகி இருக்க பயன்படுகிறது.
சத்தான உணவுகளை எப்படி சாப்பிட வைப்பது?
குழந்தைகள் சத்தான உணவுகளை (Kuzhanthaigal Unavu Sapiduvathu) சாப்பிட மறுப்பு தெரிவித்தால் எப்படி சாப்பிட வைக்கலாம்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். உணவு விஷயத்தில் குழந்தைகள் எப்போதும் ஒருவரை பார்த்து கற்றுக் கொள்கின்றன. அதனால் குழந்தைகளை ஊக்குவிக்க நாம் சாப்பிடுவதை ருசித்து சாப்பிட்டு அதனை பார்க்க வைக்க வேண்டும். Mushroom Gravy: நாவில் எச்சில் ஊறவைக்கும் காளான் கிரேவி.. கமகமவென வீட்டிலேயே செய்து அசத்துங்கள்.. வீக்கெண்ட் ஸ்பெஷல் ரெசிபி.!
இந்த விஷயங்களில் கவனம்:
நாம் ஒரு பொருளை ஒதுக்கினால் குழந்தைகளும் அது நமக்கு தேவையில்லாதது என ஒதுக்கிவிடும். ஆகையால் நாம் காய்கறி சாப்பிட்டு குழந்தைகளிடம் அதனை பாராட்டினால் குழந்தைகளும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். அதே போல குழந்தைகளுக்கு பசிக்கும்போது உணவு கொடுக்க வேண்டும்.
இப்படி ட்ரை பண்ணி பாருங்க:
கத்தரிக்காய், அவரைக்காய், புடலங்காய் போன்றவற்றை குழந்தைகள் விரும்பும் விதத்தில் வித்தியாசமான முறையில் நறுக்கி கொடுக்கலாம். குழந்தைகள் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விரும்பவில்லை என்று முடிவு எடுக்காமல் அதனை சமைக்கும் போது வாசனையை முகர்ந்து பார்க்க வைக்கலாம். இது உணவின் மீதான விருப்பத்தை அதிகரிக்கும். முறுக்கு, குளிர்பானம் உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்து பழக்காமல் பழம், காய்கறிகளை வாங்க சந்தைகளுக்கு அழைத்து செல்வது நல்லது. காய்கறிகளை கழுவுவது, எடுத்து வைப்பது போன்ற சிறு வேலைகளிலும் அவர்களை ஈடுபடுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். காய்கறிகள், பொரியல், கூட்டு சமைத்து கொடுக்கலாம். அதேபோல அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது குழந்தைகளின் நல்ல மனநிலையை அதிகரிக்கும்.