அக்டோபர் 30, பசும்பொன் (Ramanathapuram News): தென்னகத்தின் சுபாஷ் சந்திர போஸ் என்று போற்றப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் (Muthuramalinga Thevar) 117 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா இன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு அரசு மற்றும் அரசியல் கட்சிகள், தனிநபர்களின் சார்பில் குருபூஜை விழாவை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முத்துராமலிங்கத்தேவரின் (Thevar Jayanthi) சொந்த கிராமமமான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, பசும்பொன் கிராமத்தில் குருபூஜை விழா கொண்டாட்டமாக சிறப்பிக்கப்படும். அவரின் நினைவிடத்திற்கு சென்று பலரும் நேரில் வழிபாட்டு வருவார்கள். குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உட்பட பல தென் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. Minister Sivasankar: பாமக ராமதாஸ் வைத்த குற்றசாட்டு; அமைச்சர் சிவசங்கர் கடும் கண்டனம்.. காரணம் என்ன?
தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை:
மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இன்று காலை 09:30 மணியளவில், அரசின் சார்பில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து பசும்பொன் புறப்பட்டு சென்ற முதல்வர் & அமைச்சர்கள், முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முதல்வர் & அமைச்சர்கள் கோரிப்பாளையம், பசும்பொன்னில் தேவர் குருபூஜை சிறப்பித்த காட்சிகள்: