ஜனவரி 14, சென்னை (Chennai News): 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 13ம் தேதியான நேற்று போகி பண்டிகையுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து ஜனவரி 14 இன்று தைப்பொங்கல், ஜனவரி 15 மாட்டுப்பொங்கல், ஜனவரி 16 அன்று காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் சிறப்பிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று, சூரியப்பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. நாளை மாட்டுப்பொங்கல் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படவுள்ளது. Pongal Celebration 2025: பாரம்பரியபடி மண்பானையில் பொங்கல் வைத்து வழிபாடு; களைகட்டும் பொங்கல் பண்டிகை 2025..!
பொங்கல் 2025 கோலங்கள் (Pongal 2025 Celebration):
இந்த நாளில் பொங்கல் கோலங்கள் ஒவ்வொரு வீட்டின் அழகையும் தனித்துவமாக்கும். முக்கியமாக பொங்கலுக்கான கோலங்கள் இட்டு, அதன் மீது பொங்கல் வைத்து சமைத்து வழிபாடு நடத்துவது பெரும்பாலான வீடுகளில் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில், 2025ம் ஆண்டுக்கான பொங்கல் கோலங்கள் குறித்த காணொளி இத்துடன் இணைக்கப்படுகிறது.
விதவிதமான கோலங்களை கண்டு உங்களின் வீட்டில் இட்டு அழகுபடுத்துங்கள்:
பொங்கல் பண்டிகைக்கான கோலம் வடிவமைப்பு:
பொங்கல் 2025 பண்டிகை கோலம்: