
மார்ச் 08, சென்னை (Health Tips): இந்தியாவில் அதிகம் பயிடப்பட்டு வளர்க்கப்படும் வாழைப்பழ வகைகளில், செவ்வாழைப்பழம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது ஆகும். வாழைப்பழங்களில் செவ்வாழை தனித்துவம் கொண்ட பழ வகைகளில் ஒன்றாக இருக்கிறது. தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட உடல் எடை கட்டுப்படும். செவ்வாழையில் பிற பழங்களை காட்டிலும், குறைந்த அளவே நார்சத்து இருக்கிறது. இதனால் கலோரியின் அளவும் குறைந்து, செவ்வாழை உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்போருக்கு உதவி செய்கிறது. Health Tips: பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்கள்.. கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!
இரத்த சோகை பிரச்சனை உடையோருக்கு நல்ல பலன்:
செவ்வாழையில் இருக்கும் பொட்டாசியம் சிறுநீரக கற்கள் பிரச்சனையை தடுக்கும். அத்த ஓட்டத்தினை மேம்படுத்தி, சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இப்பழத்தில் இருக்கும் 75% நீர், ஆண்டி-ஆக்சிடென்ட் சருமத்தின் ஈரப்பதத்தை உறுதி செய்யும். அவ்வப்போது செவ்வாழை சாப்பிட்டு வர, சருமத்தில் ஏற்பட்டு இருக்கும் துளை, வடு சார்ந்த பிரச்சனை சரியாகும். வைட்டமின் பி6 இரத்தத்தின் தரத்தினை மேம்படுத்திடவும், ஹீமோகுளோபினின் அளவை அதிகரிக்கவும் உதவி செய்கிறது. இரத்தசோகை சார்ந்த பிரச்சனை உடையோர், தினமும் 2 செவ்வாழையை எடுத்துக்கொள்ளலாம்.
புகைப்பழக்கத்தை விட நினைப்போருக்கு வரப்பிரசாதம்:
தேங்காய், எள், பாதாம் எண்ணெயுடன் செவ்வாழை பழத்தை கலந்து தலையில் தேய்த்து குளிக்க பொடுகு, தலை வறட்சி சரியாகும். மலச்சிக்கல் சார்ந்த பிரச்சனைக்கும் செவ்வாழை தீர்வாக அமைகிறது. மூலம் சார்ந்த விஷயமும் கட்டுப்படும். மதியம் செவ்வாழையை எடுத்துக்கொள்வது செரிமான சிக்கலை தவிர்க்க உதவும். புகைப்பழக்கம் உடையோர் செவ்வாழை பழத்தினை சாப்பிட, புகை பழக்கம் கட்டுப்படும். புகையினால் ஏற்படும் பாதிக்கும் விரைவில் குணமாகும்.