ஜூன் 17, சென்னை (Health Tips Tamil): இன்றளவில் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை காரணமாக சிறுநீரக நோய் (Kidney Health) பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இளவயது நபர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனை குழந்தைகளையும் பாதிக்க தொடங்கி இருக்கிறது. Health Tips: ஒரு நாளைக்கு எத்தனை முறை குளிக்கலாம்? டிப்ஸ் இதோ.!
சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது எப்படி (Kidney Stones)?
சிறுநீரக கோளாறு பிரச்சனை உள்ளவர்களுக்கு கீழ் முதுகு பகுதியில் வலி, அடிவயிற்றில் தாங்க முடியாத வலியும் ஏற்படும். இதற்கு உணவுப்பழக்கம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது போன்றவையும் காரணமாக அமைகிறது. சிறுநீரகக்கற்கள் உருவாவதை தடுப்பதற்கு முக்கிய செயல் தண்ணீர் குடிப்பதாகும். மனித உடலுக்கு தேவையான தண்ணீரை நாம் தினமும் குடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் ஆவது குடித்திருக்க வேண்டும். உப்பு அதிகம் இருக்கும் உணவுகள் சிறுநீரக கால்சியம் சத்து அதிகரிக்கும் காரணியாகும். இது சிறுநீரக கற்களுக்கும் வழிவகை செய்யும்.
இவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது:
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், சிற்றுண்டிகளில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் புரதம் நிறைந்த உணவு, இறைச்சி போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. இதில் உள்ள புரதம் சிறுநீரில் யூரிக் அமில அளவினை அதிகரிக்கும். இதனால் சிறுநீரக கற்கள் (Prevent Kidney Stones) ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும். எலுமிச்சை, ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்களில் கால்சியம் சேரும் அளவை தடுக்கும் பண்பு உண்டு. இதனால் எலுமிச்சை சாறு நீரில் கலந்து குடிக்கலாம். அதே நேரத்தில் உடல்பருமன் மிகப்பெரிய அபாயத்தை ஏற்படுத்தும். இதனால் ஆரோக்கியம் இல்லாத எடை பராமரிப்பு முறையை கைவிட்டு உடற்பயிற்சி செய்வது நல்லது. இதனால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயமும் குறைக்கப்படும்.