
ஜூன் 16, சென்னை (Health Tips Tamil): நாம் தினமும் அளவுக்கு அதிகமாக குளிப்பது சருமத்தில் இயற்கை எண்ணெயை இழக்க வழிவகை செய்யும். தினமும் நாம் குளிப்பதால் உடலில் இருக்கும் அழுக்குகள் வெளியேற்றப்படுகிறது. தூசி, வியர்வை போன்றவை சுத்தம் செய்யப்படுகிறது. ஒரு சில நபர்களுக்கு காலை எழுந்து குளிக்கவில்லை என்றால் அன்றைய நாளே செல்லாது. அதிகாலை எழுந்து குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் அன்றைய நாளை தொடங்குவது அந்த நாளுக்கான வெற்றியை வலியுறுத்தும் என்பது பலரின் நம்பிக்கை. Kothamalli Kara Urundai: கொத்தமல்லி கார உருண்டை.. செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் இதோ.!
எத்தனை முறை குளிக்கலாம் (How Many Time Bathing Per Day)?
சாதாரணமாக நாம் குளிக்கும் போது சோப்புகளை பயன்படுத்துவோம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு மூலமாக சருமத்தில் இருக்கும் கிருமிகள் வெளியேற்றப்படும். நாம் பாடி வாஷ் உபயோகப்படுத்தும்போது காலை ஒரு முறை, மாலை ஒரு முறை என இரண்டு முறை குளிக்கலாம். கோடை காலத்தில் இது மிகவும் நல்லது. அதே நேரத்தில் மழைக்காலத்தில் இளம் சூடு உள்ள நீரில் குளிக்கலாம். கோடையில் இரண்டு முறை குளிப்பது புத்துணர்ச்சியை கொடுக்கும்.
தரமற்ற சோப்பால் பாதிப்பு (Bathing Soap) :
வியர்வை அதிகமாக வெளியேறுபவர்கள் எந்த சமயத்திலும் இரண்டு வேளை குளிக்கலாம். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குளிப்பது சருமத்தில் இருக்கும் எண்ணையை இழக்க செய்யும். அதேபோல தரமற்ற சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. இது இயற்கை எண்ணெய் உற்பத்தியில் கேள்விக்குறியை உண்டாக்கும். காலை எழுந்த பின்னும், இரவில் உறங்கும் முன்பும் குளிப்பது நல்லது.