ஆகஸ்ட் 01, சென்னை (Chennai News): சென்னை, திருப்பூர், திருச்சி போன்ற பெருநகரங்களில் இருந்து பணியாற்றுவோர், வார இறுதி மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் சென்று வருவது வழக்கம். அந்த வகையில், ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு மற்றும் வார இறுதி விடுமுறை நாட்கள் ஆகஸ்ட் மாதத்தில் அடுத்தடுத்து வருகின்றன. இதனால் பலரும் தங்களின் ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள்:
பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகள் சேவையை அறிவித்து இருக்கிறது. அதேபோல, ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இராமேஸ்வரத்திற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. NIA Raid in Tamilnadu: காலையிலேயே அதிரடி.. பாமக நிர்வாகி கொலை வழக்கில்., என்.ஐ.ஏ 25 இடங்களில் சோதனை.!
கிளாம்பாக்கத்தில் இருந்து 620 பேருந்துகள் இரண்டு நாட்களில் இயக்கம்:
அந்த வகையில், சென்னையில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று சேலம், கோவை, ஈரோடு, பெங்களூர், ராமேஸ்வரம் ஆகிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 295 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல, நாளை மறுநாள் 325 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பணியிடங்களுக்கு திரும்பவும் நடவடிக்கை:
அதிவேலையில் கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு தலா 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊர் மற்றும் இராமேஸ்வரம் செல்வோர் மீண்டும் பணியிடங்கள் மற்றும் வீடுகளுக்கு திரும்பவும் முக்கிய நகரங்களில் இருந்து சென்னை, கோவை, சேலம் போன்ற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.