ஏப்ரல் 03, சென்னை (Festival News): திருமாலின் அவதாரங்களில் 7வது அவதாரமாக போற்றப்படுவது ஸ்ரீ ராம அவதாரம் ஆகும். ராம நவமி (Rama Navami) என்பது வெறும் மத அனுசரிப்பு மட்டுமல்ல, சுயபரிசோதனை செய்து, நல்லொழுக்க வாழ்க்கை நடத்துவதற்கான உறுதிப்பாட்டைப் புதுப்பிப்பதற்கான ஒரு நேரமாகும். தசாவதாரங்களில் அதிகமானவர்களால் போற்றி, வணங்கப்படும் அவதாரமும் ராம அவதாரம் தான். அப்படிப்பட்ட ஸ்ரீ ராம பிரான் (Sri Rama) அவதரித்த தினத்தையே ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமியாக கொண்டாடி வருகிறோம். ராமர் அவதரித்தது, சைத்ர மாதம் என்படும் பங்குனி மாதத்தின் வளர்பிறை நவமி திதியில் என புராணங்கள் போற்றுகின்றன. பூமியில் உள்ள தீயசக்திகளை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட திரேதா யுகத்தில் எடுக்கப்பட்டதே ராம அவதாரம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால், ராம நவமி மிகுந்த உற்சாகத்துடனும், பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. Ram Navami 2025: ராமநவமி 2025 எப்போது? வரலாறு என்ன? வாழ்த்துச் செய்தி, நல்லநேரம், விரத முறைகள் குறித்த விபரம் இதோ.!
ராம நவமி தேதி:
இந்த 2025ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி ஏப்ரல் 06ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 01.08 முதல் ஏப்ரல் 07ஆம் தேதி அதிகாலை 12.25 மணி வரை நவமி திதி உள்ளது. அதேபோல் ராம பிரான் அவதரித்த புனர்பூசம் நட்சத்திரம், ஏப்ரல் 05ஆம் தேதி காலை 10.48 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 06ஆம் தேதி காலை 10.31 வரை உள்ளது. புனர்பூசம் நட்சத்திரம் மற்றும் நவமி திதி இரண்டு ஏப்ரல் 06ஆம் தேதியே இணைந்து இருப்பதால், அன்றைய தினமே ஸ்ரீ ராம நவமி (Sri Rama Navami) தினமாக கருதப்படுகிறது.
ராம நவமி சிறப்பு பூஜை:
ஸ்ரீ ராம நவமி, நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ராம நவமி அன்று, ராம பிரான் அவதரித்த புனித தலமான அயோத்தியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்நாளில் வீடுகளில் ராமரின் பூஜை செய்து வழிபட்டால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ராம நவமி அன்று செய்யப்படும் பூஜைகள் மகாலட்சுமியை மகிழ்விக்கும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. சீதா தேவி, மகாலட்சுமியின் அம்சம் என்பதால் ராம நவமி அன்று ராமரையும், சீதையையும் வழிபட்டால் மகாலட்சுமியின் அருளை பெற முடியும் என நம்பப்படுகிறது.
ராம நவமி விரத முறைகள்:
ராம நவமி அன்று, அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். வீட்டில் உள்ள ராமர் சிலை அல்லது படத்தை சுத்தம் செய்து, வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். சிலை இருந்தால் கங்கை நீர், பஞ்சாமிர்தம், பூக்கள், பழங்கள் படைத்து வழிபடலாம். மஞ்சள் நிற பழங்கள், இனிப்பு வகைகள் செய்து படைத்து வழிபடலாம். அதேபோல் ராமருக்கு விருப்பமான பால் பாயசம், பானகம் படையல் வைக்கலாம். அன்றைய தினம் ராம நாமம் ஜபிப்பதும், ராமரின் புகழினை கேட்பதும் பாவங்களை போக்கி, புண்ணியத்தை தரும். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்காக ராம பிரானிடம் மனதார மன்னிப்புக் கேட்க வேண்டும். இதனால் ராமரின் பரிபூரண அருள் கிடைக்கும். வாழ்வில் பலவித நன்மைகள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ ராம நவமி வாழ்த்து செய்தி (Sri Rama Navami Wishes in Tamil):
- இனிய ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துக்கள்!
Rama Navami Pic 1 (Photo Credit: Team LatestLY)
- ராம நவமியின் இனிய தருணத்தில்
அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்!
Rama Navami Pic 2 (Photo Credit: Team LatestLY) - ராமரின் தெய்வீக ஆசீர்வாதங்கள்
உங்கள் வாழ்க்கையை
மகிழ்ச்சியுடனும், செழிப்புடனும் நிரப்பட்டும்..!
Rama Navami Pic 3 (Photo Credit: Team LatestLY) - ஸ்ரீராமன் அருளினால் துன்பங்கள் நீங்க
ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்..!
Rama Navami Pic 4 (Photo Credit: Team LatestLY) - இன்பங்களும் மகிழ்ச்சியும் பெருகட்டும்
ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துக்கள்!
Rama Navami Pic 5 (Photo Credit: Team LatestLY) - சீதா ராமன் அருளால்
இன்பங்கள் நிறைந்திருக்கட்டும்
ராம நவமி வாழ்த்துக்கள்..!
Rama Navami Pic 6 (Photo Credit: Team LatestLY) - இழந்ததை நினைத்து வருந்தாதே
ஸ்ரீராமன் அருளால் வாழ்க்கை இன்பமாகும்
ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துக்கள்!
Rama Navami Pic 7 (Photo Credit: Team LatestLY) - பகவான் ராமரின் தெய்வீக ஆசீர்வாதம்
எப்போதும் உங்களை வழிநடத்தட்டும்
ராம நவமி வாழ்த்துக்கள்..!
Rama Navami Pic 8 (Photo Credit: Team LatestLY) - நம் ஆன்மாவையும் மனதையும்
ஒளிரச் செய்யட்டும்
அனைவருக்கும் ராம நவமி நல்வாழ்த்துக்கள்!
Rama Navami Pic 9 (Photo Credit: Team LatestLY) - குடும்பத்தில் அமைதியும்
ஒற்றுமையும் நிறைந்திட
ஸ்ரீ ராம நவமி வாழ்த்துக்கள்..!
Rama Navami Pic 10 (Photo Credit: Team LatestLY)