மார்ச் 31, சென்னை (Chennai): இந்து மதத்தின் இதிகாச புராணங்களின்படி, பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் (Lord Sri Vishnu) 7 வது அவதாரமான ஸ்ரீ ராமர் (Lord Rama) அவதரித்த நாள் ராமநவமியாக சிறப்பிக்கப்படுகிறது. இந்து நாட்காட்டியின் முதல் மாதமாகிய சைத்ராவில், (ஆங்கிலத்தில் ஏப்ரல் - மே), ஸ்ரீ ராமர் அயோத்தி மன்னர் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக பிறந்தார். நீதி, நன்னடத்தை மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றின் அடையாளமாகவும் ஸ்ரீராமர் பூவுலகில் விளங்கி இருக்கிறார். ராமநவமி மற்றும் அதன் சடங்கு முறைகள், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது. ராமநவமி கொண்டாட்டத்தின்போது, விரதம் இருந்து வழிபாடு செய்வது, ஸ்ரீராமரின் அருளை நேரடியாக பெற உதவுகிறது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. ராமாயணத்தை (Ramayana) உலகுக்கு பறைசாற்றிய வால்மீகி, கம்ப இராமாயணங்களில் ராமரின் பிறப்பு தொடர்பாக விவரிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னர் - ராணி கௌசல்யாவுக்கு பிறந்தவர் ராமர். தசரத மன்னருக்கு கௌசல்யா, கைகேயி, சுமித்ரா என 3 மனைவிகள் இருந்தாலும், குழந்தை வரம் வேண்டிய தசரதர், ரிஷியசிருங்க முனிவரின் உதவியுடன் யாகம் நடத்தி ராமனை மகனாக பெறார். அதேபோல, கைகேயி பராதனையும், சுமித்ரா லட்சுமணன் மற்றும் சத்ருக்கனனையும் மகனாக பெற்றெடுத்தனர். இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தி, தமிழ்நாட்டின் ராமேஸ்வரம், தெலுங்கானாவில் பத்ராசலம், பீகாரின் சீதாமர்ஹி ஆகிய நகரங்கள் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன என ராமாயண நூல்கள் குறிப்பிடுகின்றன. ராமர் அவதரித்த நாளை சிறப்புடன் கொண்டாட ராமநவமி (Rama Navami) சிறப்பிக்கப்படுகிறது. Mullangi Sambar: கோடையில் கொடையான முள்ளங்கி.. சுவையான சாம்பார் வைப்பது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
ராம நவமி 2025 (Rama Navami 2025):
2025ம் ஆண்டுக்கான ராமநவமி பண்டிகை, ஏப்ரல் 06, 2025 அன்று சிறப்பிக்கப்படுகிறது. ராமநவமியை முன்னிட்டு பக்தர்கள் பலரும் விரதம் இருந்து வழிபாடுகள் செய்து வருகின்றனர். பல ஊர்களில் உள்ள ராமர் கோவிகளில், ராம நவமி அன்று தேர் திருவிழாக்களும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்தியாவில் உள்ள இந்துக்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்துக்களும் ராம நவமி பண்டிகையை விரதம் இருந்து சிறப்பிக்கவுள்ளனர். ராமநவமி அன்று ராமனை வணங்கி விரதம் இருந்து வழிபட்டால், சகலமும் கைகூடும், மன அமைதி உண்டாகும் என்பது நம்பிக்கை. ஏப்ரல் 06 ராமநவமி தினத்தில், நவமி திதி அன்றைய நாளின் அதிகாலை 01:08 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 12:25 வரை நீடிக்கிறது. அன்றைய நாளில் காலை 07:30 மணிமுதல் 08:30 வரையிலும், மாலை 03:30 மணிமுதல் 04:30 வரையிலும் நல்லநேரம் இருக்கிறது. கௌரி நல்ல நேரமாக காலை 10:30 மணிமுதல் 11:30 முனிவரையும், மாலை 01:30 மணிமுதல் 02:30 வரையிலும் கணிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பக்தர்கள் விரதம் இருந்து, இனிப்பு, உணவு படைத்தது ராமரை வணங்கி, அவரின் அருளாசியை பெறலாம். இத்துடன் லேட்டஸ்ட்லி ஸ்ரீ ராமநவமி வாழ்த்துச் செய்தி (Rama Navami Wishes 2025 Tamil) களையும் உங்களுக்காக இணைகிறது.
ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள்:
1. ஸ்ரீ ராம நவமி நாளில் இறைவனின் அருளை பெறுவோம்!
2. அனைவருக்கும் இனிய ஸ்ரீ ராமநவமி நல்வாழ்த்துகள்!
3. நீதி, நன்னடத்தை, நல்லொழுக்கத்தின் அடையாளமான ராமரைப்போற்றி, நாமும் அவரின் வழியில் செல்வோம்!
4. ஸ்ரீ ராம நவமி இன்று, ஜெய் ஸ்ரீராம்!
5. ராமபக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீராமநவமி நல்வாழ்த்துகள்!
ஸ்ரீ ராம மந்திரம் (Shri Ram Mandra for Ram Navami 2025):
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே..
தீன்மையும் பாவமும் சிதைந்து தேயுமே..
ஜென்மமும் மரணமும் இன்றி தீருமே..
இம்மையே " ராமா " என்னும் இரண்டெழுத்தால்... ஜெய் ஸ்ரீராம்
ஸ்ரீ ராமர் பாடல்கள் (Sri Ramar Anjaneyar Pamalai Song):
எஸ்பிபி குரலில் ஸ்ரீராமஜெயம் (SPB's Rama Jeyam Sri Rama Jeyam Song):
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடரின், அற்புதம் அவன் மகிமை ஸ்ரீ ராமர் பாடல் (Ramayanam Sun TV Serial Song):