Thai Kadai Velli Lord Sri Durga (Photo Credit: @ThinkDivineOff X)

பிப்ரவரி 06, சென்னை (Chennai News): தமிழர்கள் சிறப்பிக்கும் பண்டிகைகளில், முக்கியமான பண்டிகையான தை கொண்டாட்டம் தொடங்கியதில் இருந்து, ஆன்மீக நண்பர்களின் கோவில் பிரவேசங்கள் தொடர்ந்து அதிகரித்தே இருக்கும். அந்த வகையில், அற்புதங்களை தரும் தை மாதத்தில் கடைசி வெள்ளி தை வெள்ளி (Thai Velli) என கவனிக்கப்படுகிறது. இந்த கடை வெள்ளி அன்று, அம்மனை விரதம் இருந்து வழிபட்டால் பல்வேறு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். அம்மனுக்கு விசேஷ நாட்கள் ஒவ்வொரு வெள்ளியும் வாரத்திற்கு வந்து செல்கிறது எனினும், தை வெள்ளி முக்கியமானது. Health Tips: ஒவ்வொரு நாளும் மாத்திரை எடுப்பவரா நீங்கள்? செய்ய வேண்டியது, கூடாதது என்ன? டிப்ஸ் இதோ.! 

வீட்டில் இருந்தும் வழிபடலாம்:

தை வெள்ளி சென்று அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட, செல்வம் அருள் மழையாக பொழியும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். ஆடி வெள்ளி போல, தை வெள்ளியும் மிகவும் கவனிக்கத்தக்கது ஆகும். தை வெள்ளி அன்று அம்மனுக்கு விரதம் இருந்து வழிபட, லட்சிய கனவு நனவாகும். குடும்பம் தழைக்கும். தை கடைசி வெள்ளி அன்று அதிகாலையே எழுந்து நீராடி, வீட்டில் தீபமிட்டு அம்மனை வழிபடலாம். அம்பிகை கோவிலுக்கு சென்று தீபமிட்டு வழிபடுதல் சிறப்பு. கோவிலுக்கு செல்ல இயலாதோர், அம்பிகை மற்றும் மகாலட்சுமி படத்தினை வீட்டில் வைத்து நெய் விளக்கேற்றி வழிபடலாம். அம்மனுக்கு பூ, பழம் கொண்டு அர்ச்சனை செய்யலாம்.

விளக்கேற்றி வழிபடுங்கள்:

விரதம் இருப்போர் காலை அல்லது காலை - மாலை சேர்த்து விரதம் இருந்து வழிபாடு செய்யலாம். அம்மனை மனமுருகி வழிபாட்டு வர, செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்மன் கோவில், சிவன் கோவில், துர்க்கை கோவிலுக்கு சென்று, துர்க்கையின் சன்னதியில் விளக்கேற்றி வழிபட தோஷம், கண் திருஷ்டி சரியாகும். செவ்வரளி மாலை சாற்றி, எள்ளு விளக்கேற்றியும் வழிபாடு செய்யலாம். பசியாக இருப்போர்க்கு உணவு வாங்கி கொடுத்து பசியாற்றலாம்.