Drug Pills (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 06, சென்னை (Chennai News): தினமும் இன்றளவில் எதோ ஒரு உடல்நலக்குறைவினால் மக்கள் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பழகிப்போன விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. லேசான காய்ச்சல் முதல் சர்க்கரை நோய், இதயம் சார்ந்த பிரச்சனை, புற்றுநோய் என உயிரை கேட்கும் நோய்கள் வரை சரியாக இன்றளவில் பெரும்பாலும் தடுப்பு மருந்துகள் வந்துவிட்டன. இதனால் அந்த நோய்க்காக சிகிச்சை எடுத்து வரும் நபர்கள் தினமும் மருந்து-மாத்திரைகளை உட்கொண்டு வருகின்றனர். ஒருசிலருக்கு மருத்துவரின் அறிவுரைப்படி காலை, மதியம், இரவு என 3 வேளைக்கான மருந்துகளும் இருக்கும். உடல்நலம் சரியில்லாதவர்கள், உடல்நலனை எண்ணி மருந்து எடுத்துக்கொள்கிறார்கள் எனில், மற்றொருபுறம் சிறிய அளவிலான பிரச்சனைக்கு கூட, மருத்துவரின் எந்த விதமான அனுமதியின்றி, பரிந்துரையும் இன்றி மருந்து எடுக்கின்றனர். இன்று நீங்கள் மாத்திரை எடுக்கும்போது கவனிக்க வேண்டியது குறித்த விஷயங்களை இந்த பதிவில் காணலாம்.

கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது:

சாராயம் / மது:

மது எப்போதும் வீட்டுக்கும், நாட்டுக்கும், உடல்நலனுக்கு கேடாக அமைகிறது என்பது, மதுவின் தாக்கத்தை உணர்ந்தோரின் கூற்று. ஆனால், இதனை இன்றளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கேட்பது இல்லை. மாத்திரை சாப்பிடுவோர் மதுபானம் எடுத்துக்கொண்டால், மது மாத்திரையின் செயல்திறனில் நேரடியாக கலந்துகொண்டு பக்கவிளைவின் அபாயத்தை அதிகப்படுத்தும். சிலநேரம் இது உயிருக்கும் எமனாக முடியும். இதனால் மாத்திரை எடுத்துக்கொள்வோர் மதுவை அறவே தவிர்ப்பது நல்லது. Coconut Halwa Recipe: தேங்காய் அல்வா செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..! 

திராட்சை சாறு:

திராட்சை பழம் & சாறு உடல்நலனுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது எனினும், மாத்திரையுடன் அதனை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஏனெனில், திராட்சையில் இருக்கும் சில சத்துக்கள், நேரடியாக மாத்திரையின் செயல்திறனை குறைக்கும் அல்லது அதிகரிக்கும். இதனால் உடலில் ஒவ்வாமை ஏற்படலாம்.

பால்:

தினமும் பால் குடிப்பது பலருக்கும் பிடித்த விஷயம். இரவு நேரத்தில் பலரும் பால் குடித்து உறங்குவதை விரும்புவார்கள். ஆனால், மாத்திரை எடுத்துக்கொள்ளும்போது பால் குடித்தால், சில வகையான மாத்திரையின் உறிஞ்சு சக்தியை பால் கட்டுப்படுத்தி, மாத்திரையின் செயல்திறனை குறைகிறது. அதேபோல, கொழுப்பு அதிகம் கொண்ட உணவுகளும் மாத்திரையின் செயல்பாடை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை ஆகும்.

எடுத்துக்கொள்ள வேண்டியது:

தண்ணீர்:

நாம் மாத்திரையை எடுத்துக்கொள்ளும்போது, இளம் சூடுள்ள நீரை பருகி மாத்திரையை எடுத்துக்கொள்வது நல்லது. இது மாத்திரையின் செயல்திறனை ஊக்குவிக்க உதவும். அதேபோல, மருத்துவரின் அறிவுரைப்படி உணவுக்கு முன்பு / பின் என பிரித்து வழங்கப்படும் மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் தன்மையை மாற்ற கூடாது. இது வயிறு எரிச்சல் தொடர்பான விஷயங்களை கட்டுப்படுத்த உதவும். வெறும் வயிற்றிலும் மாத்திரை சாப்பிட கூடாது.

குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் செயல்படலாம்.