Writers Available Today: Sri Ramkanna : 7 AM to 4 PM Backiya lakshmi : Week Off Rabin Kumar (Intern): Week Off

ஜனவரி 14, சென்னை (Festival News): பொங்கல் பண்டிகை (Pongal 2025) தமிழர்களின் முக்கியமான சிறப்புமிக்க பண்டிகைகளில் ஒன்றாகும். தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை {Pongal Pandikai 2025) கொண்டாடப்படுகிறது. இது விவசாயம், தமிழர்களின் கலாச்சாரம் (Tamil Culture), இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் விழாவாகும். தை (Thai Month) மாதத்தின் முதல் நாளில் தைப்பொங்கல் (Thai Pongal Wishes 2025) கொண்டாடப்படுகிறது. நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்களுக்கு அறுவடைத் திருநாளாகவும், வருடத்தில் நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் இருந்து கொண்டாடப்படும் நான்கு நாள் திருவிழாவாகும். Pongal Wishes Tamil: "தித்திக்கும் பொங்கலாய் உங்கள் வாழ்வும் இனிக்கட்டும்" உங்களுக்கான இனிய பொங்கல் வாழ்த்துகள் இதோ.! 

பொங்கல் வைக்க நல்ல நேரம்:

2025 பொங்கல் பண்டிகை 14 ஜனவரி 2025 அன்று கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடும் தைபொங்கலில் அனைவரும் எழுந்து காலையிலேயே குளித்து, பின் பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம். வீட்டில் கிழக்கு திசையை நோக்கி தான் பொங்கல் பானை வைத்து, இஞ்சி, மஞ்சள், வேப்பிலை, மாவோலை தோரணம் கொண்டு பொங்கல் பானையை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். பொங்கல் பொங்கும்போது உற்சாகத்துடன் பொங்கலோ பொங்கல் என கூறி மகிழ்ச்சிபொங்க பண்டிகையை சிறப்பிக்கலாம். தை திருநாள் முதல் நாளில் பொங்கல் வைக்க நல்லநேரமாக, அன்றைய நாளில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் உள்ளது. இதன் பின்னர், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை உகந்த நேரமாகும். பொங்கலுக்கான நல்ல நேரமாக காலை 12 மணிமுதல் 1 மணிவரை பொங்கல் வைத்து வீட்டில் பூஜை செய்து வழிபடலாம். இத்துடன் பொங்கல் வாழ்த்துக்களையும் (Pongal 2025 Wishes in Tamil) லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) உங்களுக்காக இணைக்கிறது. அதனை நீங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். Paanai Pongal Recipe: பாரம்பரிய மிக்க மண்பானை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..! 

பொங்கல் வாழ்த்துக்கள்:

1. மங்களம் பொங்கட்டும்… மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்… எண்ணியது ஈடேற… தமிழர் திருநாள்… தைப் பொங்கல் வாழ்த்துகள்!

2. அன்பும் ஆனந்தமும் பொங்கிட… அறமும் வளமும் தளைத்திட… இல்லமும் உள்ளமும் பொங்க…இனிய தமிழர் திருநாளாம்… பொங்கல் நல்வாழ்த்துகள்!

3. உழவனுக்கு ஒரு திருநாளாம்.. உலகம் போற்றும் நன்னாளாம்... சூரியனை வணங்கி விட்டு... சுருக்குப் பையில் காசு எடுத்து தித்திருக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம்… அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்!

4. காசுக்கு கரும்பு வாங்கி... அதை கால் பாகமாக உடைத்து... கடவாய் பல்லில் கடித்து... தித்திப்போடு கொண்டாடுவோம்... இந்த பொங்கல் திருநாளை... இனிய பொங்கல் வாழ்த்துகள்!

5. உறவுகளின் வீட்டில் புன்னகை பொங்க… இனம் புரியா இன்பம் மனதில் பொங்க… நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க… பொங்கட்டும் தைப் பொங்கல்!

6. வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்… வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்… உடலில் பிணி நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும்… அறியாமை நீங்கி அறிவு பொங்கட்டும்… இருள் நீங்கி ஒளி பொங்கட்டும்… அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கல் பொங்கட்டும்!

7. அன்பு பெருக… மகிழ்ச்சி என்றும் தங்க… செல்வம் நிலைக்க… நோய் நீங்க… முயற்சி பெருக… வெற்றி என்றும் உங்கள் வசமாக… இனிய பொங்கல் வாழ்த்துகள்!

8. தித்திக்கும் தைப்பொங்கலை கரும்பு போல இனிக்க கொண்டாடி மகிழ அனைவர்க்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!