Vigna Unguiculata | Karamani Payaru (Photo Credit: httpsagritech.tnau.ac.in)

அக்டோபர் 24, சென்னை (Health Tips): வட்டார மொழிகளுக்கு ஏற்ப தட்டைப்பயறு, தட்டாம் பயிறு, காராமணி என பல பெயர்களால் அழைக்கப்படும் தட்டைப்பயிறு, தன்னகத்தே பல ஊட்டச்சத்துக்களை கொண்டது ஆகும். இது நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

தெற்காசிய நாடுகளில் வெகுவாக கிடைக்கும் தட்டை பயறு, பீன்ஸ் பச்சையாக இருக்கும்போது அதன் மூலமாக எடுக்கப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும். குடலின் இயக்கத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனையை தவிர்க்க உதவி செய்யும். தட்டைப் பயிறில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்றவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடி இதய நோய்க்கான ஆபத்துகளை குறைக்கும். Work from Office: பணியாட்கள் அலுவலகத்திற்கு வந்தால் ஊதியம், பதவி உயர்வு; இந்திய தலைமை செயல் அதிகாரிகள் திட்டம்.! 

அதேபோல, உடலில் ஏற்படும் செல்களின் சேதத்தையும் தடுக்கும். கண்பார்வை அதிகரிக்கவும் உதவி செய்கிறது. கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக கருதப்படும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி போன்றவை இதில் நிறைந்துள்ளன.

பயறு வகைகளை காட்டிலும் தட்டைப்பயிறில் புரதத்தின் அளவு குறைவு என்பதால், உடலுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாது. அதனை தினமும் வேகவைத்து சாப்பிட்டு வர உடல்நலம் பெறும். கொழுப்பின் அளவும் இதில் குறைந்து உள்ளதால், இதய பாதிப்பு ஏற்படாது. ரத்த அழுத்தமும் சரியாகும்.