ஜனவரி 14, சென்னை (Chennai): வேளாண் தொழில்முனைவோராக்குதல் திட்டத்தின் கீழ் (Agricultural Entrepreneurship Scheme), வேளாண் பட்டப் படிப்பு பயின்றவர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்காக ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.
தேவையான ஆவணங்கள்:
பள்ளி சான்றிதழ்கள்,
பட்டப் படிப்பு சான்றிதழ்,
ஆதார் எண்,
குடும்ப அட்டை,
வேளாண் தொழில் சார்ந்த சுயதொழில்” தொடர்பான விரிவான திட்ட அறிக்கை மற்றும் வங்கிக் கணக்கு விவரம் Jallikattu 2025: உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!
தேவையான தகுதி:
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல் ஆகிய பிரிவுகளில் குறைந்தபட்சம் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 21 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியாதவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த நிதியுதவியைப் பெற முடியும். நிலம் மற்றும் தளவாடங்கள் உள்கட்டமைப்புக்கான செலவுகளைத் திட்ட மதிப்பீட்டில் சேர்க்கக் கூடாது.
உங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் விண்ணப்பிக்கலாம்.